வாடிக்கையாளரின் பீட்சா ஆர்டரை கேன்சல் செய்த ஜோமேட்டோ நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஜோமேட்டோ நிறுவனம் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் இந்த அபராதம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளரின் ஆர்டரை கேன்சல் செய்தது மட்டுமின்றி பணத்தையும் திருப்பி தராமல் ஜோமேட்டோ நிறுவனம் இழுத்தடித்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீட்சா ஆர்டர்
ராஜேஷ் சர்மா என்பவர் சமீபத்தில் இரவு 10.15 மணிக்கு ஜோமேட்டோ நிறுவனத்தில் பீட்சா ஆர்டர் செய்திருந்தார். அதற்காக அவர் ரூ.287.70 ஆன்லைன் வழியாக செலுத்தி இருந்தார். மேலும் உணவை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக கூடுதலாக 10 ரூபாயும் செலுத்தி இருந்தார்.
டெலிவரி
சரியான நேரத்தில் டெலிவரி செய்யவில்லை என்றால் உங்கள் பணம் உங்களுக்கு என்ற விளம்பரத்தின் அடிப்படையில் இந்த ஆர்டரை அவர் செய்திருந்தார். ஆனால் 10.30 மணி ஆகியும் அவருடைய ஆர்டர் டெலிவரி செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி ஜோமேட்டோ நிறுவனம் அவரது ஆர்டரை கேன்சல் செய்ததோடு பணத்தை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்தார். ஒரு ஆர்டரை எடுக்கும்போது அந்த ஆர்டரை தன்னால் டெலிவரி செய்ய முடியுமா? என்பதை உறுதி செய்த பின்னர்தான் ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும், சரியான நேரத்திற்கு டெலிவரி செய்ய கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த பின்னர் ஆர்டரை டெலிவரி செய்யும் நேரம் கடந்த பிறகு ஆர்டரை கேன்சல் செய்வது சேவை குறைபாடு என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
வழக்கு
இந்த வழக்கு முதன்மை நீதிபதி திரு.ராஜ் சேகர் அட்ரி, மற்றும் துணை நீதிபதி திரு. ராஜேஷ் கே ஆர்யா, ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற ஆர்டரை சரியான முறையில் தருவதாக விளம்பரம் செய்து, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஆர்டர் டெலிவரி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆர்டரை கேன்சல் செய்வது முற்றிலும் தவறான செயல் என்று தெரிவித்தனர்.
இழப்பீடு
இதனால் வாடிக்கையாளர் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.10,000 மற்றும் ஒருவேளை உணவு இலவசமாக வழங்குமாறு உத்தரவிட்டனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications