இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தினமும் நிலையான அளவில் உயர்வதினால் முதலீட்டாளர்களும் சோமேட்டோ மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சோமேட்டோ இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்தின் உபர்ஈட்ஸ் வர்த்தகத்தை முழுவதுமாகக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமேசான்
சில மாதங்களுக்கு முன் அமேசான் இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்ய நிலையில் விரைவாக இத்துறை வர்த்தக்ததை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உபர்ஈட்ஸ் வர்த்தகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்த நிலையில் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தான் சோமேட்டோ தற்போது உபர்ஈட்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மதிப்பீடு
இந்தியாவில் உபர்ஈட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் இல்லை என்றாலும் அதன் டெக்னாலஜி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் உபர்ஈஸ்ட்-இன் வர்த்தகத்தின் மதிப்பு 400 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது.
சோமேட்டோ உபர்ஈட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் நிலையில் இதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் உபர் நிறுவனம் 150 முதல் 200 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளதாகவும் தெரிகிறது.
புதிய முதலீடு
இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் சோமேட்டோ அடுத்தச் சில மாதங்களில் 600 மில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடாக வெளிச்சந்தையில் இருந்து ஈட்ட உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது. இந்தச் செய்தியை டிசம்பர் மாத துவக்கத்தில் சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபென்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம்
சோமேட்டோ தற்போது இந்தியா முழுவதும் ஒரு நாளுக்கு 13 லட்சம் ஆர்டர்களைப் பெற்று வருகிறது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 1,50,000 உணவகங்களைத் தனது நெட்வொர்க் கீழ் வைத்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. சோமேட்டோ.
சோமேட்டோவின் சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி 600 நகரங்களில் சுமார் 14 லட்ச உணவகங்களைத் தனது நெட்வொர்க்-இல் இணைத்து வர்த்தகம் செய்து வருகிறது.
வர்த்தகச் சந்தை
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, குறிப்பாக வருடத்திற்கு 16 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2023ஆம் ஆண்டுக்குள் இத்துறையின் மொத்த வர்த்தக மதிப்பு 17.02 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதனால் போட்டியும் நாளுக்குநாள் கடினமாகி வருகிறது. மேலும் அமேசான் தனது உணவு டெலிவரி சேவையை இன்னும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவில்லை, இத்துறையில் அனைத்தும் நிறுவனங்களும் தற்போது அமேசான் நிறுவனத்தை எப்படி எதிர்கொள்ள மட்டுமே தயாராகி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இன்னுமொரு தள்ளுபடி மழையில் நனைய தயாராக இருக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications