சோமேட்டோ சேவை நிறுத்தமா.. எந்த நாட்டில்.. என்னவாச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

சோமேட்டோவிற்கு வரும் வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பி விடப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 24, 2022 முதல் சோமேட்டோ வாடிக்கையாளர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தலாபத்திற்கு திருப்பி விடப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

பிரிட்டன் நிறுவனங்களின் முக்கிய கோரிக்கை.. ரிஷி சுனக் அரசு செய்யுமா..? இந்தியர்களுக்கு லாபமா..? பிரிட்டன் நிறுவனங்களின் முக்கிய கோரிக்கை.. ரிஷி சுனக் அரசு செய்யுமா..? இந்தியர்களுக்கு லாபமா..?

சேவை நிறுத்தம்

சேவை நிறுத்தம்

சோமேட்டோ நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடிப்படையாகக் கொண்ட வணிகத்தினை, கடந்த 2019ல் குவைத்தினை தலைமையிடமாகக் கொண்ட தலாபத்திற்கு 172 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தது. இந்த விற்பனைக்கு பிறகு தலாபத்துக்கு செலவு திருப்பிச் செலுத்துவதற்கு ஈடாக சேவைகளை (rendering service) செய்து வந்தது. தற்போது அந்த ரெண்டரிங் சேவையை நவம்பர் 24, 2022 முதல் நிறுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஒப்பந்த விதிமுறைகள்

ஒப்பந்த விதிமுறைகள்

UAE-ல் சோமேட்டோ ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள், ஒப்பந்த விதிமுறைகள் படி தலாபத்திற்கு திருப்பி விடப்படுவார்கள் என்று சோமேட்டோ பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சோமேட்டோவின் இந்த சேவை நிறுத்தமானது நிதி ரீதியாக எந்தவகையிலும் நிறுவனத்தை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சேவை

தொடர்ந்து சேவை

சோமேட்டோ தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உணவக கண்டுபிடிப்பு மற்றும் டைனிங் அவுட் சேவைகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த இடை நிறுத்தம் மூலம் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என எக்ஸ்சேஞ்சிற்கு சொல்ல நினைக்கிறோம் என தெரிவித்துள்ளது.

சோமேட்டோவின் முதல் விரிவாக்கம்

சோமேட்டோவின் முதல் விரிவாக்கம்

கடந்த 2012ம் ஆண்டில் சோமேட்டோவின் ஒரு உலகளாவிய முதல் பயணமாக யு ஏ இ - இருந்தது. இது அதன் மொத்த ஆர்டர்களில் 20% பங்கு வகித்தது. இது சோமேட்டோவின் முதல் விரிவாக்கமாக இருந்த நிலையில், தற்போது இப்படியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிகர நஷ்டம்

நிகர நஷ்டம்

இதற்கிடையில் சோமேட்டோ நிறுவனத்தின் நிகர நஷ்டமானது கடந்த ஆண்டில் 434.9 கோடி ரூபாயாக இருந்த நிலையில். இந்த ஆண்டு 250.8 கோடியாக குறைந்துள்ளது. இதே செயல்பாட்டு வருவாய் விகிதமானது 62.20% அதிகரித்து, 1661.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் எப்படி?

இந்தியாவில் எப்படி?

இந்தியாவினை பொறுத்தவரையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர விற்பனை, கடந்த செப்டம்பர் காலாண்டில் 1177.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 31.3% ஆகும். இது கடந்த ஆண்டில் 897.10 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தியாவில் லாபமா?

இந்தியாவில் லாபமா?

இதே இதன் நிகர லாபம் 102.82% அதிகரித்து, 11.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 414.20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. இதன் எபிடா விகிதம் 117.44% அதிகரித்து, 56.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் இபிஎஸ் விகிதம் 0.01 ஆக இருந்தது.

வளர்ச்சி

வளர்ச்சி

தொடர்ச்சியாக சரிவினை மட்டுமே கண்டு வந்த நிறுவனம், தற்போது தான் இந்தியாவில் வளர்ச்சியினை எட்ட தொடங்கியுள்ளது. சரிவில் இருந்து தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வணிகத்தினை முற்றிலும் நிறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சோமேட்டோ
English summary

zomato plans to exit UAE ordering service: users will be redirected to talabat

Zomato announced that it will discontinue its food delivery and ordering service in the UAE. The suspension will not affect the company financially in any way, it said
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X