இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமாக சோமேட்டோ முதல் முறையாக லாபத்தை பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஓ வெளியிட்டு பட்டியலிடப்பட்ட சோமேட்டோ லாபத்தை பெறாத ஓரே காரணத்திற்காக பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, அதாவது இன்று மாலை சோமேட்டோ வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் பங்கு முதலீட்டாளர்களை மனம்குளிர வைக்கும் வகையில் முதல் முறையாக லாபத்தை அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சோமேட்டோ நிறுவனம் 2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, இதோடு ஜூன் காலாண்டில ரூ.2,416 கோடி வருவாய் ஈட்டி அசத்தியுள்ளசு. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் வருவாய் 70.9 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், சோமாட்டோ சுமார் 186 கோடி ரூபாய் அளவிலான நிகர இழப்பை சந்தித்துள்ளகு. இதேபோல் 2022 ஜூன் காலாண்டில் சோமேட்டோ 1,414 கோடி ரூபாய் அளவிான வருவாய் மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சோமேட்டோ நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க மிக முக்கியமான காரணம் இந்த ஜூன் காலாண்டில் நாட்டில் பணவீக்கம் குறைந்த காரணத்தால் மக்கள் அதிகளவில் உணவுகளை ஆர்டர் செய்ய துவங்கினர். இதேபோல் உணவு விநியோக தளத்தின் loyalty programme-ஐ வலிமைப்படுத்தியது மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக சோமேட்டோ தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நியூ ஏஜ் நிறுவனங்களின் மீது நம்பிக்கை இழந்து இருக்கும் வேளையில் சோமேட்டோவின் முதல் முறையாக 2 கோடி ரூபாய் லாபம் என்ற செய்தி கோடை வெயிலில் பெய்த மழை போல் இருக்கிறது, இந்த மழை தொடருமா என்பதும் சந்தேகம் தான் காரணம் லாபம் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே இது ஒரு நாள் வர்த்தகத்தில் மறைய கூடிய அளவில் தன் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 1.83 சதவீதம் வரையில் உயர்ந்து 86.45 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications