சைவ உணவுக்கு, சைவ டெலிவரி.. வாங்கிகட்டிக்கொண்ட Zomato சிஇஓ..! அனல் பறக்கும் டிவீட்..!!

ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை வீட்டிற்கே டெலிவரி செய்யும் சோமோட்டோ நிறுவனம் நேற்று, "ப்யூர் வெஜ் மோட்" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென பிரத்யேக "ப்யூர் வெஜ் ஃப்ளீட்" (டெலிவரி படை) ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது, சொல்லப்போனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு சோமேட்டோ சிஇஓ விளக்கம் கொடுத்துள்ளார்.

சோமேட்டோ நிறுவனத்தின் சீஇஓ தீபீந்தர் கோயல் அறிவித்துள்ள இந்த "ப்யூர் வெஜ் மோட்" சேவை, சுத்த சைவ உணவு உண்பவர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. இந்த ஆஃப்ஷன் கீழ் சுத்த சைவ உணவகம் மட்டுமே லிஸ்ட் செய்யப்படும், அதேபோல் இந்த ஹோட்டல்களில் ஆர்டர் செய்யும் போது ப்யூர் வெஜ் ஃப்ளீட் டெலிவரி ஊழியர்கள் மட்டுமே உணவை பெற்று டெலிவரி செய்வார்கள்.

சைவ உணவுக்கு, சைவ டெலிவரி.. வாங்கிகட்டிக்கொண்ட Zomato சிஇஓ..! அனல் பறக்கும் டிவீட்..!!

இதன் மூலம் அசைவ உணவு அல்லது அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகத்தின் சைவ உணவு கூட இந்த பச்சை நிற டெலிவரி பையில் வைத்து டெலிவரி செய்யப்பட மாட்டாது என்ற அளவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சேவையை சுத்த சைவ உணவு உண்பவர்களின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் நடவடிக்கை என சிலர் பாராட்டினாலும், பலர் இது தேவையற்றது அல்லது சமுக பின்னடைவு என சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து டிவிட்டரில் தீபீந்தர் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.

சைவ உணவுக்கு, சைவ டெலிவரி.. வாங்கிகட்டிக்கொண்ட Zomato சிஇஓ..! அனல் பறக்கும் டிவீட்..!!
சைவ உணவுக்கு, சைவ டெலிவரி.. வாங்கிகட்டிக்கொண்ட Zomato சிஇஓ..! அனல் பறக்கும் டிவீட்..!!
சைவ உணவுக்கு, சைவ டெலிவரி.. வாங்கிகட்டிக்கொண்ட Zomato சிஇஓ..! அனல் பறக்கும் டிவீட்..!!

இந்த நிலையில் சோமேட்டோ சிஇஓ தீபீந்தர் கோயல் கொடுத்த விளக்க பதிவில், இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியதற்கு மக்கள் மிகுந்த ஆதரவான கருத்துகளை பலரிடம் இருந்து பெற்றுள்ளேன். இறைச்சி உணவு உண்பவர்கள் கூட, 'இனி என் பெற்றோர்களும் சோமேட்டோ பயன்படுத்தலாம்' என்று கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அம்சம் உணவுப் பழக்க வழக்கங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். சில வாடிக்கையாளர்கள், மதம் அல்லது சாதி பாகுபாடு இன்றி, இறைச்சி விற்கும் உணவகத்தில் இருந்து உணவை ஆர்டர் செய்யவே மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

ஆனால் ஏன் டெலிவரி படையை பிரிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது, "சில சமயங்களில், உணவு டெலிவரி பைகளில் கசிந்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில், முந்தைய ஆர்டரின் உணவின் வாசனை அடுத்த ஆர்டருக்குச் சென்றுவிடும். இதனைத் தவிர்க்கவே சுத்த சைவ உணவு ஆர்டர்களுக்கென தனி டெலிவரி படையை உருவாக்க வேண்டியிருந்தது.

எங்கள் டெலிவரி பணியாளர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்பதையும் நாங்கள் உறுதி அளிக்கிறோம் என சோமேட்டோ சிஇஓ தீபீந்தர் கோயல் தனது விளக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

சில சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWAs) எங்கள் வழக்கமான டெலிவரி பணியாளர்களை இனி அனுமதிக்காமல் இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், அதனைத் தடுக்க குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

இந்த மாற்றத்தால் எங்களுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதை நாங்கள் அறிவோம், தேவை ஏற்படும்போது இதனைச் சரிசெய்வதை உறுதி அளிக்கிறோம், எந்த காரணத்திற்காகவும் பின்வாங்க மாட்டோம். மேலும் இந்த மாற்றத்தால் எதிர்மறையான சமூக விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக இந்த சேவையை திரும்பப் பெறுவோம் என்று உறுதியளித்துள்ளார் சோமேட்டோ சிஇஓ தீபீந்தர் கோயல்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+