இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான் சோமேட்டோ, தனது நிறுவனப் பெயரை "எட்டர்னல்" (Eternal) என மாற்றியமைப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. குவிக்-காமர்ஸ் தளமான பிளிங்கிட்டை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, நிறுவனம் உள் நிர்வாகத்தில் வெளியிட்டப்பட்ட அனைத்து அறிக்கைகளிலும் "எட்டர்னல்" என்ற பெயரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பெயரை மாற்றியுள்ளது.
கார்ப்ரேட் உலகில் பெரும்பாலான நிறுவனங்கள் தனது பிராண்டை முன்னிலைப்படித்தி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது. ஆனால் பின்னாளில் தனது வர்த்தகத்தை பல பிரிவுகளில் வரிவாக்கம் செய்யும் போது இதை பிராண்ட் பெயரில் பங்குச்சந்தையில் இயங்குவது தனது பிராண்ட் மதிப்புக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது.

உதாரணமாக பேஸ்புக் முதலில் பங்குச்சந்தையில் இதே பிராண்ட் பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் பின்னாளில் வாட்ஸ்அப், அக்குலஸ், இன்ஸ்டாகிராம் என பல வெற்றி பிராண்டுகளை உருவாக்கியது. மார்க் ஜூக்கர்பெர்க் பிராண்ட் மதிப்பை கணக்கிட்டு Meta என பெயர் மாற்றினார். இதேபோல் கூகுள், பங்குச்சந்தையில் ஆல்பபெட் என பெயர் மாற்றியது.
இதன் வழியில் தற்போது சோமேட்டோ, பிளிங்க்இட்-ஐ கைப்பற்றிய பின்பு, மிகப்பெரிய வர்த்தக பிரிவாக உயர்ந்த பின்பு தற்போது பெயர் மாற்றம் முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் சோமேட்டோ இனி "எட்டர்னல்" (Eternal) என அழைக்கப்பட உள்ளது.
"எட்டர்னல்" (Eternal) நிறுவனர் தீபீந்தர் கோயல் வெளியிட்ட கடிதத்தில், நிறுவனத்தின் தற்போதைய கனவு, பயணிக்கும் திசை மற்றும் எதிர்பார்ப்புகளை "எட்டர்னல்" என்ற பெயர் சிறப்பாக பிரதிபலிக்கும் என தெரிவித்துள்ளார்.
"பிளிங்கிட்டை கையகப்படுத்தியதும், நிறுவனத்தையும் பிராண்ட்/ செயலியையும் வேறுபடுத்தி அடையாளம் காட்ட, உள் நிர்வாக செயல்முறையில் 'எட்டர்னல்' என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்கினோம். சோமேட்டோவை தாண்டிய எங்கள் எதிர்காலத்தை புதிய திசையிலும், புதிய உயரத்திற்கும் அழைத்தது செல்லும் என நினைத்து எட்டர்னல் என மாற்றியுள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளையில் "எட்டர்னல்" (Eternal) நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி யுக்தியில் தற்போது சோமேட்டோ தளத்தை தாண்டி பிளிங்கிட் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் எனவும் தீபீந்தர் கோயல் வலியுறுத்தினார்.
"எட்டர்னல்" (Eternal) நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த பெயர் மாற்றத்தை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. புதிய நிறுவனமான "எட்டர்னல் லிமிடெட்", சோமேட்டோவின் அனைத்து முக்கிய வணிகங்களையும் கொண்டிருக்கும்.
தற்போது "எட்டர்னல்" (Eternal) கீழ் சோமேட்டோ என்ற உணவு விநியோகத் துறை, குவிக்-காமர்ஸ் பிரிவான பிளிங்கிட், லைவ் ஈவென்ட்ஸ் பிரிவான "டிஸ்ட்ரிக்ட்" மற்றும் சமையலறைப் பொருட்கள் பிரிவான "ஹைப்பர்பியூர்" ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications