இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை செய்யும் சோமேட்டோ, லாக்டவுன் காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவினை ஒட்டுமொத்தமாக இந்த புது வருடத்தில் ஆர்டர்களை அள்ளிக் கொண்டுள்ளது.
இந்த புத்தாண்டு தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 4,100 ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
உண்மையில் இது கொரோனா காலகட்டத்தில் இந்த அளவிலான மீட்சி, பொருளாதாரம், தேவை மீண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.
மக்கள் விரும்பும் பிரியாணி
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமான ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, பல நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் தனது அறிக்கையில், சோமேட்டோ நிறுவனம் நிமிடத்திற்கு 22 சிக்கன் பிரியாணிகளை டெலிவரி செய்வதாக கூறியது. அதோடு மக்கள் அதிகளவில் விரும்பும் ஒரு ஸ்வீட்டாக குலாப் ஜாமூன் உள்ளதாகவும் கூறியது.
ஆன்லை ஆர்டர் அதிகரிப்பு
அதுவும் பல சலுகைகளுக்கு மத்தியில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கி வரும் நிறுவனமான, சோமேட்டோ ஆன்லைன் சலுகைக்காகவே பலரும் அடிக்கடி இந்த டெலிவரி ஆப்பினை பயன்படுத்துகின்றனர். அதிலும் நகரங்களில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில், சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் கல்லா கட்டி வருகின்றன.
கொரோனா காலகட்டத்தில் பின்னடைவு
கொரோனா காரணமாக ஆன்லைன் டெலிவரி சேவைகள் பல மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் சில மாதங்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், போதிய ஆர்டர்கள் இல்லை. ஒன்று கொரோனா காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் அத்தியாவசிய செலவுகளை தவிர மற்ற செலவினங்களை குறைத்தனர். அதோடு சுகாதாரம் கருதியும் இதனை தவிர்த்தனர். இதன் காரணமாக ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தன.
ஒரு நிமிடத்திற்கு 4100 ஆர்டர்
ஆனால் தற்போது கடந்த புத்தாண்டு தினத்தில் ஒரு நிமிடத்திற்கு 4,100 ஆர்டர்களை பெற்றுள்ளதாக தனது அறிவிப்பில் கூறியுள்ளது. அதிலும் மாலை 6.14 மணி நிலவரப்படி சுமார் 2,500 ஆர்டர்கள் கிடைத்த நிலையில் 8.22 மணியளவில் நிமிடத்துக்கு வரலாறு காணாத அளவு 4,100 ஆர்டர்களாக அதிகரித்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையில் முடங்கி போயிருந்த நிறுவனத்துக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக வந்துள்ளது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications