“சொமேட்டோ மாதிரி வெட்டியா...” என்கிற ட்விட்டுக்கு Zomato-வின் தெறி பதில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ். உலகம் முழுக்க சுமார் 19.97 லட்ச பேரை பாதித்து இருக்கிறது. சுமார் 1.26 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.

 

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவி விடக் கூடாது என்கிற ஒற்றை நோக்கில் தான் இந்தியாவில் கடுமையான லாக் டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கையை கழுவுங்கள், சானிட்டைசர்களைப் பயன்படுத்துங்கள், சமூக விலகளைக் கடை பிடியுங்கள் என பல பயமுறுத்தும் அறிவுரைகள் எல்லாமே ஆன்லைனில் வந்து கொண்டிருக்கின்றன.

உயிர்ப்பு

உயிர்ப்பு

இவ்வளவு பயங்கரமான, கொரொனா வைரஸ் வெளியே தாக்கிக் கொண்டு இருக்கும் போதும், நம்மை எல்லாம் கொஞ்சமாவது உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஸ்மார்ட்ஃபோன்கள் தான். ஆளுக்கு ஆள் மீம்ஸ், ட்விட், போஸ்ட், ஃபோட்டோ, டிக் டாக் வீடியோ, இன்ஸ்டா ஸ்டோரி என போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

எளிதாகக் கடத்தல்

எளிதாகக் கடத்தல்

மிகக் கடினமான விஷயத்தைக் கூட, ஒற்றை வரிகளில் ட்விட் & மீம்ஸ்களாகப் போட்டு, விஷயத்தை கடத்திவிடுகிறார்கள். உதாரணமாக "ஏப்ரல் மாசம் ஒழுங்கு மரியாதையா வீட்டுக்குள்ள இருந்தா, மேல (மே மாதத்தில்) மீட் பண்ணலாம். இல்ல, மேல (சொர்கம்) தான் மீட் பண்ணனும்" என ஊரடங்களை சில வரிகளில் பளிச்செனச் சொல்லிவிட்டார்கள்.

இளைஞன் ட்விட்
 

இளைஞன் ட்விட்

இந்த வரிசையில், ஒரு நபர், தன் டிவிட்டர் பக்கத்தில்
"லாக் டவுன் காலத்துல, மொபைல்ல, சொமேட்டோ அப்ளிகேஷன் வெட்டியா இருக்குற மாதிரி, நான் வெட்டியா இருக்கேன்னு என் பெற்றோர்கள் நினைக்கிறாங்க. என் பெற்றோர்கள் எவ்வளவு ஸ்மார்ட் பாருங்க..." என ட்விட் செய்து இருந்தார். அதற்கு சொமேட்டோ தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு தெறி பதில் கொடுத்து இருக்கிறது.

சொமேட்டோ பதில்

சொமேட்டோ பதில்

அந்த நபரின் ட்விட்டுக்கு ஒரு கமெண்ட் உடன் ரீ ட்விட் செய்து இருக்கிறது சொமேட்டோ. அந்த ரீ ட்விட்டில் "நாங்கள் (சொமேட்டோ) இப்பொழுது மளிகை சாமான்களை டெலிவரி செய்கிறோம். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என ஜாலியாக ஒரு ரீ ட்விட் செய்து இருக்கிறது. இது ட்விட்டரில் பலராமல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்:

பொருள்

பொருள்

பெரும்பாலானவர்களுக்கு இந்த ட்விட்டின் பொருள் புரிந்து இருக்கும். இருப்பினும் புரியாத சிலருக்காக பொருள் சொல்கிறோம். அந்த நபர் லாக் டவுன் காலத்தில், சொமேட்டோ சும்மா தான் இருக்கிறது என நாசுக்காகச் சொல்லி இருக்கிறார். ஆனால் சொமேட்டோ நாங்கள் மளிகை சாமான்களை டெலிவரி செய்யத் தொடங்கிவிட்டோம் எனச் சொல்லி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

zomato's retweet with a comment to a guy who tries to troll zomato

A guy tries to troll zomato in twitter, But the zomato official twitter ID has given a befitted reply to that guy.
Story first published: Wednesday, April 15, 2020, 17:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X