உணவு டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமான Zomato, 500 ஜூனியர் லெவல் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, Zomato தனது வாடிக்கையாளர் சேவைகளை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்குதன்மை மூலம் மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம், Zomato அதன் சேவைகளின் செயல்திறனை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மேம்பட்ட அனுபவம் வழங்க விரும்புவதாக தெரிகிறது.

உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சொமாட்டோ அசோசியேட் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் (ZAAP) சுமார் 500 ஜூனியர் லெவல் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த நடவடிக்கை Zomato இன் சேவைகளில் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுத்துவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பணிநீக்க விவரங்கள்: கடந்த ஆண்டு, சொமாட்டோ நிறுவனம் வாடிக்கையாளர் சேவைப் பணிகளுக்காக ZAAP இன் கீழ் சுமார் 1,500 ஜூனியர் லெவலில் ஊழியர்களை பணியமர்த்தியது, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்களை ஆபரேஷன்ஸ், மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் சப்ளை செயின் போன்ற துறைகளில் பயிற்சி அளித்து, அவர்களை எதிர்கால பணியிடங்களுக்கான தயார் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது.
இந்த அணுகுமுறை, சொமாட்டோ வாடிக்கையாளர் சேவைகளில் திறமையான திறன்களை உருவாக்குவதற்கான முயற்சியாகவும், அதேசமயம் அதன் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் இருந்தது. இருப்பினும், தற்போது 500 ஜூனியர் லெவல் ஊழியர்களை வெளியேற்றியுள்ள சொமாட்டோ,செயல்திறன் தொடர்பான கவலைகளைக் காரணம் காட்டி, மீதமுள்ளவர்களை விடுவித்துவிட்டு, சுமார் 1,000 ஊழியர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த முடிவு, ZAAP திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 1,500 இளநிலை ஊழியர்களின் செயல்திறன் மீதான மதிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த வேலைவாய்ப்பு குறைப்புகள், சொமாட்டோ அதன் மிகப் பெரிய வருவாய் உற்பத்தி மற்றும் மிகவும் லாபகரமான துறையான உணவு விநியோக மந்தநிலை மற்றும் ஆட்டோமேஷன் அழுத்தம் காரணமாக நிகழ்ந்தது. கடந்த மாதம் எக்னாமிக்ஸ் டைம்ஸ்-க்கு பேட்டி அளித்த Zomato CEO Deepinder Goyal, நிறுவனம் தனது வியாபாரத்தில் உள்ள கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய பணியாற்றி கொண்டிருக்கின்றது என கூறினார்.
Zypp Electric, Sharechat மற்றும் Pocket FM ஆகியவற்றில் பணி நீக்கங்களைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இந்திய புதிய கால நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய பணியாளர் குறைப்பு இதுவாகும். அதாவது, மார்ச் மாதத்தில், Zypp Electric அதன் பணியாளர்களில் 10% பேரை (110-120 ஊழியர்கள்) பணிநீக்கம் செய்தது. ஷேர்சாட் 30-40 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. Pocket FM ஜனவரியில் 75 பணியாளர்களை வேலை இழப்பு செய்தது.
தற்போது Eternal என மறுபெயரிடப்பட்டுள்ள சொமாட்டோ, டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் இலாபத்தில் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, Zomato-இன் நிகர லாபம், ஆண்டுக்கு ஆண்டுக்கு 57% குறைந்து, ரூ.59 கோடி என பதிவாகியுள்ளது. மேலும், Zomato-இன் ஊழியர் நலன் செலவுகள் 63% உயர்ந்து, ரூ.689 கோடி ஆக உள்ளன.
கடந்த ஆண்டு Zomato நிறுவனம் வாடிக்கையாளர் சேவைப் பணிகளுக்காக ZAAP இன் கீழ் சுமார் 1,500 ஜூனியர் லெவல் ஊழியர்களை பணியமர்த்தியது. அவர்களுக்கு செயல்பாடுகள், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலிப் பணிகளுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. செயல்திறன் தொடர்பான கவலைகளைக் காரணம் காட்டி, மீதமுள்ளவர்களை விடுவித்துவிட்டு, நிறுவனம் சுமார் 1,000 ஊழியர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications