இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்குகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் முக்கியமான அறிவிப்பை சோமேட்டோ அறிவித்துள்ளது.
சோமேட்டோ பங்குகள் இன்று 1 சதவீதம் வரையில் சரிந்து 89.60 ரூபாயாக உள்ளது, இதேவேளையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி சோமேட்டோ பங்குகளைக் கூடுதல் கண்காணிப்புப் பிரிவில் வைத்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் சோமேட்டோ மீதான மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் சோமேட்டோ நிறுவனம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பை பாருங்க..
சோமேட்டோ
உணவு டெலிவரி சேவை பிரிவில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோமேட்டோ இன்று முதலீட்டாளர்கள் மத்தியில் இழந்த மதிப்பு மற்றும் நம்பிக்கையை மீட்டு எடுக்க 3 முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாகச் சோமேட்டோ நிதியியல் சேவை துறையில் இறங்க உள்ளதாகவும் இதற்காகத் தனி நிறுவனத்தையும் உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
NBFC நிறுவனம்
சோமேட்டோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடந்தது, இக்கூட்டத்தில் சோமேட்டோ நிறுவனம் புதிதாக NBFC நிறுவனத்தைத் தனது கிளை வர்த்தகப் பிரிவாக உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகப் பங்குச்சந்தைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அனுமதி
இந்தப் புதிய NBFC நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் பெய்டு அப் கேப்பிடல் ஆகவும், 10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்ட பெய்டு அப் கேப்பிடல் முதலீட்டில் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. NBFC வர்த்தகத்தில் இறங்கவும், நிறுவனத்தைத் துவங்கவும் சோமேட்டோ நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
150 கோடி ரூபாய் முதலீடு
மேலும் சோமேட்டோ இன்று 2 நிறுவனத்தில் சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. AdOnMo நிறுவனத்தில் 19.5 சதவீத பங்குகளை 112 கோடி ரூபாய்க்கும், அர்பன்பைபர் டெக் நிறுவனத்தில் 37.4 கோடி ரூபாய்க்கு 5 சதவீத பங்குகளைக் கைப்பற்றுகிறது சோமேட்டோ.
AdOnMo நிறுவனம்
AdOnMo நிறுவனம் விளம்பர தொழில்நுட்பத்தில் உள்ளது, தற்போது இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது மூலம் சோமேட்ட தளத்தில் மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையில் டிஜிட்டல் விளம்பரங்களைச் செய்யவும், வர்த்தகம் செய்யவும் முடியும் எனச் சோமேட்டோ நம்புகிறது.
அர்பன்பைபர் நிறுவன
மேலும் அர்பன்பைபர் நிறுவனத்தின் சேவை மூலம் உணவகங்கள், உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி பார்டனர் மத்தியிலான இடைவெளியைக் குறைத்து ஓரே தளத்தில் இயங்கும் சேவை கொண்டு வர சோமேட்டோ முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications