இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரத்தில் உள்ள உணவையும் எந்த ஒரு நகரத்திலிருந்து ஆர்டர் செய்யலாம் என்ற இன்டர்சிட்டி சேவை என்பதை சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த சேவையின்படி ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்கட்டமாக ஒருசில நகரங்களுக்கு இடையே மட்டும் இந்த சேவை இருக்கும் என்றும் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இந்த இண்டர்சிட்டி சேவையை பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்.
ஜொமாட்டோ இன்டர்சிட்டி சேவை
ஜொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மட்டுமின்றி இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் கன்வால். இவர் ஜொமாட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி சேவையை பயன்படுத்த முடிவு செய்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பிரியாணியை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு கிடைத்தது ஒரு சிறிய பெட்டி மட்டுமே என்பதால் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
சிறிய பெட்டி
இது குறித்து கன்வால் தனது ட்விட்டரில் தனக்கு பார்சல் புகைப்படத்தை பதிவு செய்து, 'இன்டர்சிட்டி சேவை என்பது மிகச் சிறந்த யோசனையாக எனக்கு தோன்றியது. அதனால் எனக்கு பிடித்த உணவை நான் சில நாட்களுக்கு முன்னர் இன்டர்சிட்டி சேவை முறையில் ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு ஜொமாட்டோ நிறுவனம் ஒரு சிறிய பெட்டியை மட்டுமே அனுப்பி உள்ளது' என்று புகைப்படத்துடன் பதிவு செய்தார்.
மன்னிப்பு
மேலும் அவர் இந்த ட்விட்டை ஜொமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓவுக்கு டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமாற்றமடைந்த அந்த வாடிக்கையாளரின் ட்விட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் ஜொமாட்டோ நிறுவனம் இதுகுறித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. மேலும் கன்வால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு அவர் ஆர்டர் செய்த பிரியாணியை விட இருமடங்கு பிரியாணியை அனுப்பி வைத்தது.
வெற்றி
இதுகுறித்து ஜொமாட்டோ வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவரான சுஷாந்த் என்பவர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்பின்னர் கன்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நான் ஆர்டர் செய்த பிரியாணியை விட அதிகமான அளவு பிரியாணி எனக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் உள்ள இந்த சேவையை தவறு இல்லாமல் செய்தால் நிச்சயம் இது வெற்றி பெறும்' என்று அவர் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications