4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான சோமேட்டோ தனது ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும் ஆதிக்கத்தையும் செய்து வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாகத் திகழ்ந்த சோமேட்டோ நிறுவனம் கடந்த 4 நாட்களில் முதலீட்டாளர்களின் பர்ஸில் மிகப்பெரிய ஓட்டையைப் போட்டு உள்ளது என்றால் மிகையில்லை.

சோமேட்டோ

சோமேட்டோ

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஐபிஓ வெளியிட்டு வெற்றிகொண்ட முதல் நிறுவனமாக சோமேட்டோ நிறுவனம் திகழ்கிறது. ஜூலை 2021ல் சோமேட்டோ 76 ரூபாய் விலையில் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65 சதவீதம் ப்ரீமியம் விலையான 125.85 ரூபாய்க்கு பட்டியலிட்டு வெற்றிபெற்றது.

 சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள்

ஆனால் கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட சரிவில் சோமேட்டோ பங்குகள் 112.55 ரூபாய் என்ற 52 வார சரிவை பதிவு செய்து ஐபிஓ முதலீட்டாளர்கள் முதல் நீண்ட கால முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை.

 15,624 கோடி ரூபாய் இழப்பு

15,624 கோடி ரூபாய் இழப்பு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் மூலம் 4 நாள் தொடர் வர்த்தகச் சரிவை சோமேட்டோ பதிவு செய்தது. இதனால் முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பில் 15,624 கோடி ரூபாய் அல்லது 2.10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.

 5 சதவீதம் சரிவு

5 சதவீதம் சரிவு

சோமேட்டோ பங்குகள் ஜனவரி 17ஆம் தேதி முதல் சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளது, இதேவேளையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடும் சரிந்து உள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 427.44 புள்ளிகள் சரிந்து 59,037.18 புள்ளிகளை எட்டியுள்ளது.

 பெடரல் ரிசர்வ் முடிவு

பெடரல் ரிசர்வ் முடிவு

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் இருக்கும் காரணத்தால் இந்திய சந்தையில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர். இதன் வாயிலாகத் தடுமாற்றம் நிறைந்த அனைத்து நிறுவனங்களும் கடுமையான சரிவை எதிர்கொண்டு உள்ளது.

 ஸ்டார்ட்அப் நிறுவன பங்குகள்

ஸ்டார்ட்அப் நிறுவன பங்குகள்

சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களான பேடிஎம், கார்டிரேட், PB பின்டெக் மற்றும் பினோ பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை தனது ஐபிஓ விலையில் இருந்து 10 முதல் 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நைகா நிறுவனம் ஐபிஓ-விற்குப் பின் பதிவு செய்யப்பட்ட உச்ச விலையில் இருந்து 21 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+