சோமேட்டோ நிறுவனம், மந்தமான டிமாண்ட் இருந்ததன் காரணமாக அதன் ஹைபர்லோகல் பொருட்கள் டெலிவரி சேவையான "எக்ஸ்ட்ரீம்" சேவையை நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான சோமேட்டோ தொடர்ந்து லாபத்தைப் பதிவு செய்து வரும் காரணத்தால் இதன் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேவேளையில் சோமேட்டோ தனது சேவைகளைத் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோமேட்டோ எக்ஸ்ட்ரீம் என்ற பார்சல் அல்லது பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியது, ஒரு வருடத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லாத காரணத்தால் இச்சேவையை முடக்கியுள்ளது. இதேவேளையில் இந்நிறுவனம் இன்டர்சிட்டி உணவு டெலிவரி சேவையான"லெஜண்ட்ஸ்" மூன்றாவது முறையாக மீண்டும் தொடங்கியுள்ளது.
எக்ஸ்ட்ரீம் சேவை, சோமேட்டோ உணவு விநியோக சேவை வழங்கும் சுமார் 750-800 நகரங்களில் அனைத்திலும் தனது உணவு டெலிவரி பார்ட்னர்களை வைத்து துவங்கப்பட்டது. இதேவேளையில் சோமேட்டோ தளத்தில் இருக்கும் உணவகங்களுக்கும் பார்சல் சேவை அளிக்கப்பட்டது.
இப்பிரிவில் தற்போது ஷேடோஃபாக்ஸ், போர்ட்டர் மற்றும் லோடுஷேர் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சேவை அளித்து வருகிறது. இந்த நிலையில் போதுமான டிமாண்ட் இல்லாத காரணத்தாலும், போட்டி போட முடியாத காரணத்தாலும் எக்ஸ்ட்ரீம் சேவை முடக்கப்பட்டு தற்போது எக்ஸ்ட்ரீம் செயலி கூகுள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications