டிசம்பர் 31ஆம் தேதி இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் வேளையில் நாட்டின் முக்கிய வர்த்தக பிரிவாக இருக்கும் குவிக் காமர்ஸ், ஆன்லைன் டெலிவரி துறையை சேர்ந்த சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், ஜெப்டோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் திட்டமிட்டு இருந்த உணவு ஆர்டர்கள், மளிகை பொருட்கள் மற்றும் கடைசி நேர ஷாப்பிங் ஆகியவற்றை பெரிதும் பாதிக்க உள்ளது. அதிலும் குறிப்பாக பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர்.

வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள் என்ன?
தெலுங்கானா கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் யூனியன் (TGPWU) மற்றும் Indian Federation of App-Based Transport Workers ஆகிய அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. நீண்ட நேர வேலை, குறைந்துவரும் ஊதியம், டெலிவரி ஊழியர்களுக்கு பாதுகாப்பின்மை, வேலை உத்தரவாதம் இல்லாமை ஆகியவை முன்னிறுத்தி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்த முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டும், அனைத்து டெலிவரி சேவை நிறுவனங்களும் இதற்கான தீர்வை காண வேண்டும் என நோக்கத்துடன் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
குறிப்பாக 10 நிமிட டெலிவரி முறை டெலிவரி ஊழியர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து என்றும், இத்தகைய முறை டெலிவரியை செய்ய டெலிவரி ஊழியர்களை நிர்பந்தம் செய்ய கூடாது எனவும் இந்த அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது.
தெலுங்கானா கிக் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் ஷைக் சலாவுதீன் கூறுகையில், இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். இதேபோல் பல மாநிலத்தின் அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் மற்றும் சில இரண்டாம் நிலை நகரங்களில் ஆர்டர்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து ஆகலாம். சர்ஜ் விலை உயர்வு மற்றும் நீண்ட காத்திருப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே கடைகளில் வாங்கிவிடுங்கள். குவிக் காமர்ஸ் ஆப்களை அவசர தேவைக்கு நம்ப வேண்டாம். ஆஃபர்கள் இருந்தாலும் டெலிவரி உத்தரவாதம் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications