ஒவ்வொரு புத்தாண்டுக்கும் உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டிலேயே அதிகப்படியான ஆர்டர் வரும் ஒரு நாள். இந்த முக்கிய நாளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை டெலிவரி ஊழியர்கள் அறிவித்த நிலையில், மக்கள் தற்போது அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையை உடனடியாக சமாளித்து, டெலிவரி ஊழியர்களை பணிக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கி சேவையை தொடர வலியுறுத்தி வருகிறது.

தெலங்கானா கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் யூனியன் (TGPWU) மற்றும் Indian Federation of App-Based Transport Workers ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் குறைந்துவரும் ஊதியம், நீண்ட வேலை நேரம், பாதுகாப்பின்மை மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாதது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை இன்று நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தில் சுமார் 1.7 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள வேளையில் குவிக் காமர்ஸ் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
டிசம்பர் 25 அன்று நடந்த முந்தைய போராட்டத்தைத் காட்டிலும் இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெலிவரி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
புதிய ஊக்கத்தொகை
சோமாட்டோ நிறுவனம் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூ.120 முதல் ரூ.150 வரை ஊதியம் வழங்க உள்ளதாக அறிவித்துல்ளது. மேலும், ஆர்டர் ரத்து அல்லது மறுப்புக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒரு டெலிவரி ஊழியர் ரூ.3,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற முக்கியமான பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஆர்டர் அதிகமாக வரும் நாட்களில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்று சோமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஸ்விக்கி நிறுவனம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து ரூ.10,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 முதல் 12 மணி வரை ரூ.2,000 வரை கூடுதல் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அதிக ஆர்டர் வரும் காலங்களில் ஊக்கத்தொகை அதிகரிப்பது இத்தகைய டெலிவரி நிறுவனங்களின் வழக்கமானது.
டெலிவரி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் சேவைகள் காலை முதல் கடுமையாக வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications