கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவரும் எதிர்பார்க்கும் முக்கியமான மேட்ச் என்றால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான். இன்று ஆட்டம் துவங்கியதில் இருந்து இந்திய மக்கள் டிவிக்கு முன்பு உட்கார்ந்து இருக்கின்றனர்.
இந்த உலக கோப்பை போட்டிக்காக அனைத்து தரப்பு வர்த்தகமும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக உணவகங்கள், மது அருந்தும் இடங்கள், விளையாட்டு மைதானங்கள் என பல இடத்தில் ஸ்போர்ட்ஸ் தீம் உடன் உலக கோப்பையை கொண்டாடி வருகின்றனர்.

இதனாலேயே உலக கோப்பை போட்டிகளின் போதும் அதிகளவிலான சீட்டுகள் காலியாகவே உள்ளது. ஆனால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் அகமதாபாத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு வருகின்றனர்.
இந்த முக்கியமான தருணத்தை பணமாக்கவும், வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் ஒரு தருணமாக பார்க்கப்படும் நிலையில் Swiggy Instamart, Zomato, Tinder, Blinkit போன்ற முன்னணி இணைய சேவை நிறுவனங்கள் சிறப்பான வகையில் மேட்ச்-க்கு முன்பாகவே பாகிஸ்தான் அணியை கலாய்த்து விளம்பரம் செய்ததது.
உலகக்கோப்பை போட்டியில் 8வது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணியை சாதித்தது நிலையில் இந்த விளம்பரம் டிரெண்டிங் ஆகி வருகிறது.
Zomato : இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ டிவிட்டரில், அன்புள்ள பாகிஸ்தான், பார்கர், பீட்சா கேட்டா கிடைக்கும். வோல்டு கப்பு கிடைக்காது என்பதை போஸ்டராக அடித்து மார்கெட்டிங் செய்ததை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
Swiggy : இன்று பச்சை காய்கறியை யாரும் சமைக்க வேண்டும், ஏனெனில் இந்திய கிரிட்கெட் அணி நமக்காக சமைக்க போகிறது.

இதை தொடர்ந்து ஒருவர் மழை வர மாதிரி இருக்கும், நானும், கிரிக்கெட் மைதானத்தில் பணியாளர்கள் உடன் ரெயின்கோட் வாங்க போகிறேன் என Swiggy-ஐ டேக் செய்து பதிவிட்டார். இதற்கு ஸ்விக்கி கண்டிப்பா மழை பெய்யும், அது கண்ணீர் மழையாக இருக்கும் என டிவிட் செய்து கலாய்த்தத.
Tinder : பச்சை கொடி பக்கம் இருந்து இன்று ஒரு நாள் மட்டும் தள்ளியே இருங்க என டின்டர் டிவிட்டரில் அதகளப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications