தமிழ் மொழியால் வாழும் சோமேட்டோ.. அடி தூள்..!

இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை தளமாக இருக்கும் சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல புதிய முயற்சிகளைச் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஆங்கில மொழியில் அதிகம் பழக்கம் இல்லாதவர்களைத் தனது வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிராந்திய மொழிகளில் சோமேட்டோ ஆப் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர் சேவை முதல் நோட்டிபிகேஷன் வரையில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு மக்களுக்குச் சேவை அளித்து வருகிறது.

சோமேட்டோ

சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தின் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளைத் தற்போது ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம், பஞ்சாபி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வழங்கி வருகிறது.

1,50,000 ஆர்டர்கள்

1,50,000 ஆர்டர்கள்

சோமேட்டோ நிறுவனம் தனது சேவை தளத்தில் ஆங்கிலத்தைத் தவிரப் பிற மொழிகளில் சேவை அளிப்பதன் வாயிலாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1,50,000 ஆர்டர்களைப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.

ஹிந்தி, தமிழ்

ஹிந்தி, தமிழ்

இதை விட முக்கியமாகப் பிற மொழிகளைப் பயன்படுத்தும் சோமேட்டோ வாடிக்கையாளர்கள் மத்தியில் 54 சதவீத வர்த்தகம் ஹிந்தி மொழியில் இருந்தும், 11 சதவீத வர்த்தகம் தமிழ் மொழியில் இருந்தும் வருவதாகச் சோமேட்டோ தெரிவித்துள்ளது.

60 சதவீத வர்த்தகம்

60 சதவீத வர்த்தகம்

மற்ற மொழி வாடிக்கையாளர்கள் மத்தியிலான வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகம் ஹிந்தி மற்றும் தமிழ் மொழி வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வருகிறது.

1000 நகரங்கள்

1000 நகரங்கள்

சோமேட்டோ இந்தியாவில் சுமார் 1000 நகரங்களில் வர்த்தகம் செய்து வந்தாலும் பிராந்திய வாடிக்கையாளர்களை அடைவது சோமேட்டோவுக்குப் பெறும் சிக்கலாக உள்ளது, அப்படிப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து வர்த்தகத்தைப் பெறுவது என்பது கூடுதல் சுமையாக உள்ளது.

டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்

டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்

ஆனால் இந்த நிலை காலப்போக்கில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் மத்தியிலான விழிப்புணர்வு மூலம் சரியாகி விடும் என நம்பப்படுகிறது. இந்த நிலை சோமேட்டோ நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் மற்ற அனைத்து டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் உள்ளது.

சோமேட்டோ முயற்சி

சோமேட்டோ முயற்சி

சோமேட்டோ நிறுவனத்திற்குத் தற்போது கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் சிறப்பானது, மேலும் பிராந்திய மொழி சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்திச் சரியான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய உள்ளோம் எனச் சோமேட்டோ தற்போது தெரிவித்துள்ளது.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

தமிழ்நாட்டிலும், தமிழ் மொழியிலும் சோமேட்டோ செயலியை பயன்படுத்துவோருக்கு வரும் நோட்டிபிகேஷன் இணைய உலகில் மிகவும் பிரபலமானது, சினிமா டயலாக் வாயிலாகவும், நகைச்சுவையாகவும், நேரத்திற்கு ஏற்ப வித்தியாசமான நோட்டிபிகேஷன் அனுப்புவதன் மூலம் சோமேட்டோ அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

நோட்டிபிகேஷன் பெண்

நோட்டிபிகேஷன் பெண்

இந்தப் பிரபலமான நோட்டிபிகேஷன்-களை அனுப்புவது ஒரு பெண் எனச் சில நாட்களுக்கு முன்பு சோமேட்டோ ஊழியரின் பதிவு வெளியானது மூலம் யார் அந்தப் பெண் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள்

அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட், சோமேட்டோ நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி, சீனாவின் அலிபாபா குழுமம் சோமேட்டோ நிறுவனத்தில் சுமார் 12.98 சதவீத பங்குகளை வைத்துள்ளது. தற்போது 3 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மொத்த பங்கு இருப்பு 9.98 சதவீதமாகக் குறைய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+