இந்திய ஐபிஓ சந்தையில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த சோமேட்டோ நிறுவனம் சமீபத்தில் தமிழ் மொழி குறித்து அதன் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் மற்றும் பிற மொழி குறித்துச் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்-ன் டிவீட் இந்திய மக்களை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைத்தது.
இந்நிலையில் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் ஐபிஓ வெளியிட்டதன் நோக்கத்தையும், தேவை குறித்தும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
உணவு டெலிவரி சேவை
இந்திய உணவு டெலிவரி சேவையில் முன்னோடியாக இருக்கும் சோமேட்டோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சக போட்டி நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் மறுபுறம் சோமேட்டோ தனது வர்த்தக ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சோமேட்டோ நிறுவனம்
சோமேட்டோ நிறுவனத்திடம் வெறும் 6 மாதத்திற்கான நிதி இருப்பு மட்டுமே இருக்கும் நிலையில் புதிய முதலீடுகளைத் திரட்ட முடியாத காரணத்தால் நிறுவனம் திவாலாகும் நிலையில், வேறு வழியே இல்லாமல் தான் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டைத் திரட்டியுள்ளோம் எனச் சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனம்
இதைவிட முக்கியமாக இந்தியச் சந்தையில் இதுவரை எந்தொரு ஸ்டார்ட்அப் நிறுவனமும் ஐபிஓ வெளியிட்டுப் பட்டியலிடப்படாத நிலையில் சோமேட்டோ வேறு வழியே இல்லாமல் ரிஸ்க் எடுத்து வெற்றிகண்டு உள்ளது. இந்த ஐபிஓ தோல்வி அடைந்திருந்தால் சோமேட்டோ நஷ்டத்தில் மட்டும் அல்லாமல் அதிகளவிலான கடனில் மூழ்கியிருக்கும்.
அதிகத் தள்ளுப்படிகள்
கொரோனா காலத்தில் ஆன்லைன் உணவு வர்த்தகம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்த வேளையில் வர்த்தகத்தைத் திரும்பப் பெற அதிகளவிலான தள்ளுப்படிகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் இருந்தது. இந்த விஷயத்தில் தான் சோமேட்டோவும் பெரிய அளவில் பாதித்தது.
சீன முதலீடு
இந்தக் கொரோனா காலகட்டத்தில் தான் இந்திய அரசு சீன முதலீடுகளுக்குப் பெரும் தடையை விதித்து முதலீட்டு வாய்ப்புகளைக் குறைத்தது. இதனால் சோமேட்டோ தனது நிறுவனத்தின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தப்பிக்க வேறு வழி இல்லாமல் ஐபிஓ வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications