மஞ்சூரியன், போர்க் பெல்லி, ஸாபைசி நூடுல்ஸ், சிக்கன் செஸ்வான் பிரைடு ரைஸ் என்று பல வகைகள் இருந்தாலும் மோமோஸுக்கு என்று அலாதியான சுவை உண்டு. பிரைடு மோமோஸ், ஸ்டீம்டு மோமோஸ் என இருவகைகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் சூப்பி மோமோஸும் உண்டு.
மென்மையான மடக்குப் பணியாரம் போல இருக்கும் ஸ்டஃப் செய்யப்படும் காய்கறிகள், இறைச்சிகள் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் முதியவர்களும் இதை எளிதில் ஜீரணம் செய்து விடலாம்.

இப்படிப்பட்ட மோமோஸூக்கு ஹைதராபாத்தில் உள்ள ஷௌவிக் தார் ஓர் அடிமை. நேஷனல் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவருக்குப் பிடித்தமான வகையில் மோமோஸ்கள் கடைகளில் கிடைக்காததால் அவரே சுயமாக மோமோஸ் செய்ய முடிவு செய்துவிட்டார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் சில்சாரை பிறந்து வளர்ந்த ஷௌவிக் தார் இன்ஜினியரிங் படித்துவிட்டு டிஆர்டிஓ நிறுவனத்தில் சயின்டிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு பிரபாதி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஸோமோஸ் என்ற பிராண்டில் மோமோஸ்களைத் தயாரித்து ஹைதராபாத்தில் விற்று வருகிறார்.
அவரின் மோமோஸுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். முதல் கடையை 2016இல் ஷௌவிக் திறந்தார். மோமோஸ் பிரபலமானதும் அதிகமான கடைகளைத் தொடங்கினார்.
ஒரே வருடத்தில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற ஷௌவிக்கை பிரபலமான சினிமா தியேட்டர் செயின் நிறுவனம் அணுகி தங்களது தியேட்டர்களில் மோமோஸை விற்கும்படி கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஷௌவிக் ஹைதராபாத், விஜயவாடா மட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் தனது மோமோஸை விற்பனை செய்து வருகிறார்.

மோமோஸ் மிகப் பெரிய அளவில் தேவைப்பட்டதால் அதைத் தயாரிக்க புதிய மெஷினை உருவாக்க ஷௌவிக் திட்டமிட்டார். பல மாதங்கள் ஆராய்ச்சிகளும் சீனா, கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு மோமோஸ் தயாரிக்கும் முறைகளையும் பார்த்து வந்து தனது மெஷினை ஷௌவிக் வடிவமைத்தார். மோமோஸ்ஸுக்காக காய்கறி வெட்டுவது முதல் மாவு பிசைவது வரை அந்த மெஷின் செய்தது.
அதிக மெஷின்களை தயாரித்து தனது மோமோஸ் புரோடக்ஷன் சென்டரில் நிறுவினார்.
இந்த மெஷின்கள் மூலம் மணிக்கு 8000 மோமோஸ்கள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 25 ஆயிரம் மோமோஸ்கள் மொத்தம் தயாரிக்கப்படுகின்றன.
இப்போது மோமோஸ் விற்பனையில் லட்சக்கணக்கில் ஷௌவிக் தார் சம்பாதித்து வருகிறார். வருடத்துக்கு 25 கோடி ரூபாய் வருமானம் பார்க்கிறார். தெலுங்கானா, கேரளாவில் அவரது மோமோஸுக்கு பெரிய கிராக்கி உள்ளது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications