சமீபத்திய காலமாக சர்வதேச அளவில் பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. இது உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ரெசசன் அச்சம் என்பது விரிவடைந்துள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி பொருளாதார நாடுகளையே பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தான் டெக் ஜாம்பவான்களான கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக், அமேசான் என பல முன்னணி நிறுவனங்களும், மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்துள்ளன.
30 நிமிடங்களில் மெயில் பாருங்க
இன்னமும் கூட இந்த பணி நீக்கம் என்பது முடிந்தபாடாக இல்லை. இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. பல முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை தொடர்ந்து வருகின்றன.
இந்த பணி நீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜூம் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது. இது குறித்து ஜூம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவான், நீங்கள் அமெரிக்காவினை சேர்ந்த ஊழியர் என்றால், அடுத்த 30 நிமிடங்களில் உங்களது மெயிலை செக் செய்யுங்கள். அதில் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மட்டும் பணி நீக்கமா?
அப்போது அமெரிக்காவில் மட்டும் தான் பணி நீக்கமா? என்றால் அப்படியில்லை. மற்ற நாடுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு, அந்தந்த நாட்டு தலைமை அதிகாரிகள் பணி நீக்கம் குறித்தான அறிவிப்பினை கொடுப்பார்கள் என ஷாக் கொடுத்துள்ளது.
ஜூமின் தேவை
சமீபத்திய காலமாக, குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஜூம் ஆப்பின் தேவை என்பது கணிசமாக உயர்ந்தது எனலாம். பல நிறுவனங்களும் இந்த ஜூம் ஆப் மூலமாகவே அலுவலக சம்பந்தமான கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய கூட்டங்கள் என பலவும் கூட்டங்களை கூட்டின. சில நிறுவனங்கள் ஜூம் கால் மூலமாக பணி நீக்கம் செய்ததும் அப்போது சர்ச்சையானது. ஆனால் அத்தகைய ஜூம் நிறுவனத்திலேயே பணி நீக்கம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சம்பளமும் குறைப்பா?
ஜூம் நிறுவனம் தனது மொத்த ஊழியர் தொகுப்பில் சுமார் 15% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜூமின் தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவான், சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அதன் தாக்கத்தினை அதன் வாடிக்கையாளர்களும் உணரத் தொடங்கியுள்ளன. ஆக இது ஒரு கடினமான காலம். ஆக இப்படி ஒரு கடினமான முடிவினை எடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
சம்பளமும் குறைப்பு
ஆக நிறுவனத்தின் நீண்டகால நலன் கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், உங்களின் அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
பணி நீக்கம் மட்டும் அல்ல, மற்ற ஊழியர்களுக்கு பெரும் சம்பள குறைப்பும் செய்துள்ளதாக எரிக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
98% சம்பளம் குறைப்பு
எரிக் யுவான் தனது சம்பள விகிதத்தில் 98% குறைப்பதாகவும், தனக்கு போனஸ் இல்லை என்றும் அறிவித்துள்ளார். குழுவில் உள்ள மற்ற தலைவர்களுக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20% வரையில் அடிப்படை சம்பளத்தில் குறைப்பு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.
தேவை சரிவு
கொரோனா காலத்தில் தேவையானது பெரியளவில் அதிகரித்த நிலையில், அப்போது அதிகளவிலான பணியாளர்களை பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், தேவையும் சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக ஆட்குறைப்பும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. செலவை குறைக்க வேண்டிய நிலையில் நிறுவனம் உள்ளது. ஆக இதுபோன்றதொரு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம் என விளக்கம் கொடுத்துள்ளது.
ஜூமின் வரலாறு என்ன?
கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜூம் நிறுவனம், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இது டெக் நிறுவனங்களின் தாக்கம் என்பதை காட்டிலும், கொரோனாவின் தாக்கமும் உள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் வணிகங்கள் குறைந்துள்ள நிலையில், அவர்கள் ஜூமின் பயன்பாட்டினையும் குறைத்துள்ளனர். இதனால் இவற்றின் வருமானம் குறைந்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications