லாக்டவுன் காலத்தில் பங்குச்சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அனைத்து முதலீட்டாளர்களையும் வியக்க வைத்த ஒரு நிறுவனம் என்றால் ஜூம். பள்ளிக்கு செல்லும் குழுந்தைகள் முதல் நிறுவனத்தின் சிஇஓ வரை ஏன் அரசியல் தலைவர்கள் கூட ஜூம் தளத்தை பயன்படுத்தி தான் லாக்டவுன் காலத்தில் பிறருடன் பேசினர்.
ஆனால் ஜூம் செயலிக்கு போட்டியாக கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ் உட்பட பல நிறுவனங்கள் வீடியோ கான்பிரன்ஸ் சேவை அளிக்க துவங்கியதால் ஜூம் நிறுவனத்தின் பங்குகள் மளமளவென சரிந்தது, இதனால் வர்த்தகம், வாடிக்கையாளர்களை இழந்தது. இந்த நிலையில் ரெசிஷன் அச்சம் வேறு அனைத்து டெக் நிறுவனங்களும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய தூண்டியுள்ளது.
இந்த நிலையில் ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள வேளையில் தற்போது ஜூம் நிர்வாகம் அதன் தலைவரான Greg Tomb-ஐ பணிநீக்கம் செய்துள்ளது.
ஜூம் நிறுவனம்
அமெரிக்க பங்குச்சந்தையில் இருக்கும் ஜூம் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் நிர்வாகம் அதன் தலைவர் (President) Greg Tomb-ஐ பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. Greg Tomb குறிப்பிட்ட காரணத்திற்காக உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவருக்கான Severance pay பணி நியமன ஆணைப்படி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Greg Tomb பணிநீக்கம்
தொழிலதிபரும், முன்னாள் கூகுள் ஊழியருமான Greg Tomb ஜூன் 2022 முதல் இப்பதவியில் உள்ளார், ஜூம் தனது வருவாய் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய முக்கியமான கட்டத்தில் தான் இவரை முக்கியமான பொறுப்பில் நியமித்தது. ஜூம் நிறுவனத்தின் பல்வேறு நிதி கூட்டத்தில் கலந்துக்கொண்டது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் விற்பனை பிரிவையும் வழிநடத்தி வந்தார்.
சிஇஓ எரிக் யுவான்
ஜூம் நிறுவனத்தின் சிஇஓ எரிக் யுவான் உடன் நெருங்கி பணியாற்றி வந்தவர் தான் Greg Tomb, 2011 ஆம் ஆண்டில் ஜூம் தளம் உருவாக்கப்பட்டு பெரிய அளவில் மார்கெட்டிங் செய்து பல ஆண்டுகளாக வீடியோ கான்பிரன்சிங் சேவையில் முன்னோடி நிறுவனமாக இருந்தது. அதிலும் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் ஜூம் செயலி தான் பல பேருக்கு பெரிய அளவில் உதவியது.
போட்டி
உலகளவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் அனைத்தும் ஜூம் தளத்தை தான் அதிகாரப்பூர்வ வீடியோ கான்பிரென்சிங் தளமாக பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாக்டவுன்-க்கு பின்பு மொத்தமும் மாறியது. போட்டி நிறுவனங்களின் வருகை காரணமாகவும், கட்டணம் வசூலிக்கும் காரணத்தாலும் ஜூம் தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைய துவங்கியது.
1300 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த நிலையில் தான் பிப்ரவரி 7ஆம் தேதி தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் அதாவது 1300 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் ஒரு மாத இடைவெளியில் தற்போது அதன் தலைவர் (President) Greg Tomb-ஐ பணிநீக்கம் செய்துள்ளது.
எரிக் யுவான் சம்பளம் கட்
இதேவேளையில் ஜூம் நிறுவனத்தின் சிஇஓ எரிக் யுவான் தனது மொத்த சம்பளத்தில் 98 சதவீதத்தை குறைத்துக் கொண்டார், முக்கியமாக தனது போனஸ் தொகையும் குறைத்துக்கொண்டார். இதுமட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த நிர்வாக அணியும் இந்த வருடம் 20 சதவீத போனஸ் தொகையை கைவிட முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications