நோயல் டாடா தலைமையிலான ட்ரெண்ட் நிறுவனம், Zudio பிராண்டை மிகப்பெரிய அளவில் வெற்றி மாடலாக மாற்றியிருக்கும் வேளையில் இதே கட்டமைப்பில் ஆடைகளை தாண்டி அடுத்தடுத்து பிற பொருட்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய தனி பிராண்டை உருவாக்கியுள்ளது.
இதற்காக Zudio Beauty என்ற தனி பிராண்டை அறிமுகம் செய்துள்ளது டாடா குழுமம். இந்த Zudio Beauty தற்போது ஹிந்துஸ்தான் யூனிலீவர்-ன் Elle18, சுகர் காஸ்மெடிக்ஸ், ஹெல்த் & குளோ மற்றும் கலர்பார் போன்ற நிறுவனங்களுடன் மலிவு விலை அழகு சாதன பொருட்கள் பிரிவில் நேரடியாக போட்டியிட உள்ளது.

Zudio-வின் அறிமுகம் எப்படி ரிலையன்ஸ் டிரென்ஸ், மேக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியதோ, இதேபோன்ற மேஜிக்-ஐ தற்போது அழகு சாதன பொருட்கள் பிரிவில் கொண்டு வர உள்ளது. Zudio-வின் அதன் ஆடை மற்றும் பேஷன் பொருட்களின் தரத்தை அடிப்படையாக கொண்டது, விளம்பரம் இல்லாமல், ஆன்லைன் விற்பனை இல்லாமல் குறைந்த விலையில், தரமான பொருட்களை விற்பனை செய்தால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற முடியும் என்பதற்கு Zudio சிறந்த ஒரு உதாரணம்.
இந்த நிலையில் புதிய Zudio Beauty கடை, மலிவு விலை அழகு சந்தையை கைப்பற்றவும், உலகளவில் இருக்கும் பியூட்டி ட்ரெண்டிங் பொருட்களை இந்தியாவுக்கு மலிவு விலையில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ், நைக்கா மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல ரீடைல் சாம்ராஜ்ஜியங்கள் பிரீமியம் மற்றும் ஆடம்பர அழகு சாதன பிரிவுகளில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் டாடா குழுமம் தனது முதல் Zudio Beauty கடை பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது, மேலும் ட்ரெண்ட் குருகிராம், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற பிற முக்கிய நகரங்களில் தனது புதிய அழகு சாதன பொருட்கள் கடையை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் அடையாளமாக விளங்கும் காஸ்மெட்டிக்ஸ் பிராண்டான லக்மே- வை உருவாக்கியது என்னவோ டாடா குழுமம் தான், சுதந்திர இந்தியாவில் பெரும் புரட்சி செய்த லக்மே தற்போது ஹிந்துஸ்தான் யூனிலீவர் கையில் உள்ளது. இதனால் டாடா குழுமத்திற்கு காஸ்மெட்டிக்ஸ் பிரிவு ஓன்றும் புதியது அல்ல, இதுவு டாடா பலெட்டிலேயே உள்ளது.
நியோல் டாடா தலைமையிலான ட்ரெண்ட் நிறுவனத்திற்கு Zudio மாபெரும் வெற்றியாக இருப்பது மட்டும் அல்லாமல், இந்தியாவில் மிகப்பெரிய ஆடை பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2017ஆம் நிதியாண்டில் அதன் தொடக்கத்திலிருந்து, மக்களை கவர்ந்து வரும் Zudio தற்போது தனது ரீடைல் ஸ்டோர்களில் சதுர அடிக்கு 16,300 ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. இது இந்திய ரீடைல் துறையில் இருக்கும் சக நிறுவனங்களை ஒப்பிடுகையில் சராசரி அளவை காட்டிலும் இரட்டிப்பாகும்.
இந்தி ரீடைல் சந்தையில் Zudio-வின் வருவாய் மற்றும் கடை எண்ணிக்கை இரண்டிலும் பெரும்பாலான போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. Zudio இன் வலுவான சந்தை நிலை மற்றும் பிஸ்னஸ் மாடல் தான் தற்போது Zudio Beauty பிறப்புக்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications