குஜராத் என்றாலே நம் நினைவிற்கு வருவது முதலில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபரான கௌதம் அதானி. அதானி குழுமத்தின் வர்த்தகம் இந்தியா முழுக்க ஏன் உலகின் பல நாடுகளில் இருந்தாலும் அதன் தலைமையகமும், கௌதம் அதானியின் வீடும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் தான் உள்ளது.
இதனாலேயே குஜராத் எப்போதும் அதானியின கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் குஜராத்தில் இவர் மட்டும் தான் பெரிய தொழிலதிபரா என்றால் இல்லை, வட இந்தியாவில் பெரும்பாலான வர்த்தகர்களும், தொழில்திபர்களும் குஜராத்தை பூர்வீகமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் குஜராத்தில் கௌதம் அதானிக்கு போட்டியாக ஒரு தொழிலதிபர் பிரைவேட் ஜெட் வாங்கிய கதை உங்களுக்கு தெரியுமா..? யார் இந்த தொழிலதிபர்..? பிரைவேட் ஜெட் வாங்கும் அளவுக்கு இவரிடம் என்ன இருக்கிறது..?
70 வயதான Zydus குழுமத்தின் தலைவர் பங்கஜ் படேல் அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர். சுமார் 63,580 கோடி சந்தை மூலதனம் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சைடஸ் லைஃப் சயின்ஸ் லிமிடெட் என்ற முன்னணி நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை பங்கஜ் படேல் வழிநடத்துகிறார்.
2012ல் சேலஞ்சர்-604 விமானத்தை வாங்கியபோது அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு பிறகு ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கியது அகமதாபாத்தைச் சேர்ந்த இரண்டாவது கோடீஸ்வர தொழிலதிபர் என்றால் பங்கஜ் படேல் ஆவார்.
பிரைவேட் ஜெட் வாங்கியதை குறித்து பங்கஜ் படேல் பேசுகையில் நான் விமானத்தை வாங்கியதை அப்போது வெளியில் சொல்ல விரும்பவில்லை, பொதுவெளியில் என்னை பற்றி அதிகம் பேசுவதை நான் விரும்பமாட்டேன் என தெரிவித்தார். ஆனால் இப்போது குஜராத்தில் 2வதாக பிரைவேட் ஜெட் வாங்கியவர் என்ற பெருமையுடன் உள்ளார்.
பங்கஜ் படேல் வாங்கிய விமானம் பாம்பார்டியர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது 7 முதல் 12 இருக்கைகள் வரை இருக்கலாம் மற்றும் அந்த நேரத்தில் இதன் மதிப்பு 10 மில்லியன் டாலர் அதாவது ரூ.50 கோடி முதல் 14 மில்லியன் டாலர் அதாவது ரூ.80 கோடி வரையில் இருக்கலாம்.
பங்கஜ் படேலின் Zydus Lifesciences முன்பு காடிலா ஹெல்த்கேர் என்று அழைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1952 ஆம் ஆண்டில் பங்கஜ் படேலின் தந்தை ஒரு வர்த்தக பார்ட்னர் உடன் வைட்டமின்கள் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்டது.
பங்கஜ் படேல் 1976 இல் வணிகத்தில் சேருவதற்கு முன்பு குஜராத் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பயின்றார். காடிலா ஹெல்த்கேர் நிறுவனச்தை உருவாக்கிய நிறுவனர் குடும்பங்கள் தனித்தனியாக செல்ல முடிவு செய்ததால், பங்கஜ் படேல் 1995 இல் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டுகிறது. அதன் பிரபலமான தயாரிப்புகளில் சுகர் ஃப்ரீ, கோவிட்-19 தடுப்பூசி, ஜிகோவி-டி, கோவிட்-19 மருந்து ரெம்டெசிவிர் ஆகியவை கிலியட் மற்றும் முன்னணி குஜராத் மருத்துவமனை செயின் நிறுவனமான சைடஸ் மருத்துவமனைகள் இக்குழுமத்தின் கீழ் உள்ளது.
பங்கஜ் படேல் புகழ்பெற்ற IIM உதய்பூர் உட்பட பல கல்வி நிறுவனங்களின் குழுவில் உள்ளார். அவர் 64 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பகிர்ந்துள்ள ஒரு கண்டுபிடிப்பாளர் என்பது பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் வியக்கவைக்கும் ஒரு விஷயமாகும்.
பங்கஜ் படேல் கடந்த ஆண்டு இந்தியாவின் 49வது பணக்காரராக இருந்தார். அவரது நிகர மதிப்பு தற்போது 6.2 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 51,537 கோடி ரூபாய்க்கு மேல். அவரது மகன் டாக்டர் ஷர்வில் படேல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (MD) பொறுப்பேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications