ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்திருக்கலாம்? இதுதான் லிமிட்! இதைத் தாண்டினால் பிரச்சனை!

நாளுக்கு நாள் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. வங்கிகள் கொடுக்கும் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கின்றனர். ஆனால் வங்கிகள் கொடுக்கும் ஆஃபருக்காக புதுப்புது கார்டுகளை சேர்த்துக்கொண்டே போனால் அது பிற்காலத்தில் உங்களுக்கு சுமையாக மாறிவிடும். இந்த பதிவில் ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்திருக்கலாம்? என்பதைப் பார்ப்போம்.

ஒருவர் இத்தனை கிரெடிட் கார்டு தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு வங்கியோ அல்லது சிபில் அமைப்புகளோ எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அவரவர் செலவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப எத்தனை கிரெடிட் கார்டுகள் வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிய பிறகு சரியாக பணம் செலுத்துகிறீர்களா? கிரெடிட் கார்டு லிமிட்டை தாண்டி செலவு செய்கிறீர்களா? எவ்வளவு ஆண்டுகளாக கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை புதுப்புது கிரெடிட் கார்ட் பெற விண்ணப்பித்திருக்கிறீர்கள்? என்ற அனைத்து விவரங்களையும் சிபில் கவனிக்க தொடங்கிவிடும். இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் தவறு செய்தாலும் உடனே உங்கள் சிபில் ஸ்கோர் குறையத் தொடங்கும்.

ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்திருக்கலாம்? இதுதான் லிமிட்! இதைத் தாண்டினால் பிரச்சனை!

ஒரு கார்டை மட்டும் வைத்திருக்கலாமா?: கிரெடிட் கார்டுக்கு பிறக் கடன்களைக் காட்டிலும் வட்டி சற்று அதிகம். ஒவ்வொரு வங்கியையும் பொறுத்து 32 முதல் 45 சதவீத வருடாந்திர வட்டி இதற்கு விதிக்கப்படுகிறது. எனவே ஒரே ஒரு நல்ல கிரெடிட் கார்டை தேர்வு செய்வது போதுமானதாக இருக்கும். கிரெடிட் லிமிட் அதிகமாக இருக்கிறதே என்பதற்காக மட்டும் புதுப்புது கிரெடிட் கார்டுகளை வாங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. உங்களுக்கு தேவைப்படும் அனைத்து சலுகைகளும் ஒரே ஒரு கார்டில் கிடைத்தால் அதையே பயன்படுத்தலாம். ஒரு கார்டை வைத்திருக்கும் போது பில் கட்ட வேண்டிய தேதியையும் எளிதாக நினைவில் கொள்ள முடியும். சிரமமின்றி ஈஎம்ஐ செலுத்தவும் உதவியாக இருக்கும்.

Also Read

இரண்டு அல்லது மூன்று கார்டுகள் எப்போது தேவைப்படும்?: ஒரு சிலர் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப இரண்டு கார்டு வைத்திருப்பார்கள். இதில் எந்த தவறும் இல்லை. உதாரணமாக ஒன்றை அன்றாட செலவிற்கும், கேஷ் பேக் பெறவும் பயன்படுத்தலாம். மற்றொன்றை பெட்ரோல் செலவு அல்லது பிற பயணச் சலுகைகளுக்காக பயன்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் இருக்கும் போது கிரெடிட் லிமிட் அதிகமாக இருக்கும். ஆனால் உங்களுடைய செலவும் அதற்கு ஏற்ப இருக்க வேண்டும்.

அதிகக் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால் என்ன பிரச்சனை ஏற்படும்?: இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்கும் போது ஒவ்வொரு கார்டின் ஸ்டேட்மெண்டையும் தனித்தனியாக கண்காணிக்க வேண்டும். வங்கிகள் கொடுக்கும் சலுகைக்காக 5-க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி விடுவார்கள். ஆனால் அதில் இரண்டு மூன்று கார்டுகளை மட்டும் தான் சரியாக பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது மீதமுள்ள கார்டுகள் தேவையற்ற சுமையாக மாறிவிடும்.

அடிக்கடி புது கார்டு வாங்க விண்ணப்பிக்காதீர்கள்: அடிக்கடி கிரெடிட் கார்டு பெற விண்ணப்பித்தால் உங்கள் ஸ்கோர் குறையும். இதை வங்கிகள் ஹார்ட் என்குயரி என கருத்தில் கொள்ளும். நீங்கள் அடிக்கடி கடன் பெற விண்ணப்பிக்கும் போது பலமுறை உங்களுடைய சிபில் அறிக்கையை வங்கிகள் சரி பார்க்கும். எனவே புது சலுகைகளை பார்த்த உடனே விண்ணப்பிக்காமல் அது உண்மையிலேயே உங்களுக்கு தேவைப்படுமா என்று யோசித்து அதன் பிறகு பெறுங்கள்.

கார்டை க்ளோஸ் செய்வதற்கு முன்பு யோசித்து முடிவெடுங்கள்?: கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க நினைத்துக் கொண்டு அவசரப்பட்டு க்ளோஸ் செய்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு காலமாக கிரெடிட் வைத்திருக்கிறீர்கள் என்ற விவரங்களையும் சிபில் கருத்தில் கொள்ளும். பழைய கார்டை க்ளோஸ் செய்யும்போது உங்கள் கிரெடிட் லிமிட் குறையத் தொடங்கும்.

உங்களுக்கு ரூ.3 லட்சம் கிரெடிட் லிமிட் இருக்கிறது என்பதற்காக மொத்தமாக செலவழிக்க கூடாது. மொத்த லிமிடில் 30 சதவீதத்திற்குள் செலவழித்தால் உங்கள் சிபில் சிறப்பாக இருக்கும். எனவே ஒன்று முதல் மூன்று கார்டுகள் வரை வைத்துக்கொண்டு அதை சரிவர நிர்வகித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+