மாதம் ரூ.10,000 SIP Vs ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 1.2 லட்சம் மொத்த முதலீடு – மியூச்சுவல் ஃபண்டில் எது லாபம் தரும்?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஒன்று எஸ்ஐபி முறையில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்வது மற்றொன்று லம்ப்சம் எனப்படும் மொத்த முதலீடு முறையில் ஒரே முறையாக பணத்தை போடுவது.

உங்களால் ஆண்டுக்கு மொத்தம் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்றால், அதனை ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது நல்லதா? அல்லது அந்த தொகையை ஆண்டின் தொடக்கத்தில் ஒரே முறையாக 1.2 லட்சம் ரூபாய்முதலீடு செய்வது நல்லதா? இந்த இரண்டு உத்திகளில் எதில் அதிக லாபம் கிடைக்கும் என பார்க்கலாம்.

மாதம் ரூ.10,000 SIP Vs ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 1.2 லட்சம் மொத்த முதலீடு – எது லாபம் தரும்?

மாதந்தோறும் எஸ்ஐபி: ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் வீதம் முதலீடு செய்வது. இது படிப்படியாக செய்யப்படும் முதலீடு என்பதால், விலை குறைவாக இருக்கும் போது அதிக யூனிட்டுகளையும், விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த யூனிட்டுகளையும் வாங்க உதவுகிறது. இதற்கு Rupee Cost Averaging என பெயர்.

மொத்த முதலீடு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்திலேயே அந்த ஆண்டுக்கான முழு தொகையான 1.2 லட்சத்தை ஒரே முறையாக செலுத்துவது. இந்த முறையில் முழு தொகையும் ஒரே கட்டமாக சந்தைக்கு செல்வதால், SIP-ஐ விட உங்கள் பணம் வளர அதிக காலம் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் முதலீடு செய்த உடனேயே சந்தை சரிந்தால், ஒட்டுமொத்த தொகையும் அந்த சரிவை சந்திக்க நேரிடும்.

Also Read

இந்த இரண்டு முறைகளிலும் 10 ஆண்டுகளில் மொத்த முதலீட்டுத் தொகை 12 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆண்டுக்கு தோராயமாக 12% வருமானம் கிடைப்பதாக கொண்டு கணக்கு செய்தால், மாதாந்திர முதலீட்டு தொகை 10,000 ரூபாய் எனில் உங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் பணம் 23 லட்சம் ரூபாய். அதுவே மொத்த முதலீட்டு முறையில் ஒரே முறையாக ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மொத்தமாக இறுதியில் கிடைக்கும் பணம் 23.59 லட்சம் ரூபாயாக இருக்கும்.

Recommended For You

இதில் மாதாந்திர எஸ்ஐபி என்பது மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் எளிதான தேர்வு. இது மாதாந்திர வருமானத்திற்கு ஏற்ப பொருந்துவதுடன், கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிக்கும் வாய்ப்பை தருகிறது. பெரும்பாலான சம்பளதாரர்களுக்கு இது தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் ஓரளவு பணம் உள்ளது அல்லது எனக்கு ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் வரும் அதனை பயன்படுத்துவேன் என்பவர்கள் லம்ப்சம் முறையில் முதலீடு செய்யலாம்.

நாம் முதலீடு செய்யும் சமயத்தில் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன, முதலீட்டை திரும்ப பெறும் போது சந்தைகள் எப்படி செயல்படுகின்றன என்பது தான் நமக்கான லாபத்தையே தீர்மானிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+