பணத்தை நம் அக்கவுண்ட்டில் வைத்திருந்தால் எந்த ஒரு வளர்ச்சியும் கிடைக்காது. சரியான இடத்தில் அதனை முதலீடு செய்தால் பணம் நமக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் SIP, Lumpsum என இரண்டு வகை உள்ளது.
சிலர் ஒரே மொத்த தொகையாக பணத்தை முதலீடு செய்வார்கள் இது Lumpsum என அழைக்கப்படுகிறது . ஒரு சிலர் மாதம் தோறும் எஸ்ஐபி முறையில் பணத்தை முதலீடு செய்வார்கள். அந்த வகையில் 10,000 ரூபாயை மாதம் தோறும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் மற்றும் 10 லட்சம் ரூபாயை ஒரே முறையாக முதலீடு செய்பவர்கள் இந்த இரண்டு பேரில் யார் முதலில் கோடீஸ்வரர் ஆவார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

SIP என்பது Systematic investment plan, அதாவது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்து கொண்டு வருவது. பெரும்பாலானவர்கள் மாதம் தோறும் எஸ் ஐபி முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் குறைந்த தொகை தான் மாதம் தோறும் உங்கள் பாக்கெட்டில் இருந்து முதலீடு செய்வீர்கள். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது பெரிய சொத்தாக வளர்ந்து நிற்கும்.
அதுவே லம்ப்சம் முதலீடு என்பது உங்கள் கைவசம் ஒரு பெரிய அளவிலான தொகை இருக்கிறது அந்த தொகையை மொத்தமாக ஒரு திட்டத்தில் முதலீடு செய்து விடுவது. உதாரணமாக உங்களிடம் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் ஐந்து லட்சத்தையும் மொத்தமாக ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து விடுவது. இந்த முதலீட்டைப் பொறுத்தவரை ஒரு பெரிய அளவிலான தொகை அந்த முதலீட்டில் சென்று விடும்.
இந்த இரண்டு முதலீட்டிலுமே காம்பவுண்டிங் தான் மேஜிக் செய்கிறது. நம் பணம் காம்பவுண்டிங் முறையில் வளர்ந்து கொண்டே செல்கிறது. நாம் தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்ளலாம். மாதத்திற்கு 10,000 ரூபாயில் எஸ்ஐபி முறையில் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் எத்தனை ஆண்டுகளில் 1 கோடி இலக்கை எட்டுவார், 10 லட்சம் ரூபாய் தொகையை மொத்தமாக ஒரே முறை முதலீடாக செய்பவர் எப்போது 1 கோடி இலக்கை எட்டுவார் என பார்க்கலாம். ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக கருதி நாம் இந்த கணக்கீட்டை மேற்கொள்ளலாம்.
Lumpsum:
ஒரு முறை முதலீடு - ரூ.10 லட்சம்
ஆண்டு வளர்ச்சி - 12%
21 ஆண்டுகளில் - ரூ.1 கோடி
செய்த முதலீடு - ரூ.10 லட்சம்
கிடைக்கும் லாபம் - ரூ.98 லட்சம்
SIP:
மாதம் ரூ.10,000
ஆண்டு வளர்ச்சி - 12%
21 ஆண்டுகளில் - ரூ.1 கோடி
செய்த முதலீடு - ரூ.25.20 லட்சம்
கிடைக்கும் லாபம் - ரூ.88.66 லட்சம்
இரண்டு முதலீடுமே நமக்கு 21 ஆண்டுகளிலேயே ஒரு கோடியாக வளர்ந்து விடுகிறது. ஆனால் எஸ்ஐபி முறையில் நாம் செய்த முதலீடு 25 லட்சம், லம்ப்சம் முறையில் நாம் செய்த முதலீடு 10 லட்சம் தான். லம்ப்சம் முறையில் நாம் கையில் இருக்கும் மொத்த பணத்தை போட்டுவிடுவோம் பின்னர் அதனை எடுத்து எதற்கும் பயன்படுத்த முடியாது, இது அனைவருக்கும் பொருந்தாது. இந்த 10 லட்சம் அடுத்த பல ஆண்டுகளுக்கு எனக்கு தேவையே இல்லை என்பவர்களுக்கு இது பொருந்தும், ஆனால் எஸ்ஐபி முதலீடு அனைவருக்குமானது. மாதம் ஒரு தொகை சேமித்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம், நம் அன்றாட தேவை, அவசர பண தேவைகளை சமரசம் செய்து கொள்ளாமலேயே இது சாத்தியப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

