தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகிறது. இது மேற்கொண்டு வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கியானது 190 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பால் ஏற்கனவே பல வங்கிகளும், வட்டி அதிகரிப்பினை செய்ய ஆரம்பித்துள்ளன.
வட்டி அதிகரிக்கும்
ரிசர்வ் வங்கியின் அதிகரிப்பால் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் தொடங்கி, புதியதாக வாங்குபவர்கள் வரையிலும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத தவணை தொகையானது இனி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதியதாக கடன் வாங்குபவர்களுக்கும் அதிக வட்டி விகிதமே விதிக்கப்படலாம். இது மேற்கொண்டு கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரும்ப செலுத்தும் காலம்
மேலும் இந்த வட்டி அதிகரிப்பால் திரும்ப செலுத்தும் கால அவகாசமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த கால அவகாசத்தினை குறைக்க வேண்டுமெனில் நீங்கள் உங்களது தவணை தொகையை அதிகரிக்க வேண்டும். அதேபோல நீங்கள் புதியதாக கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்கள் சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருக்கும் பட்சத்தில் சற்று வட்டி குறைவாக பெற முடியும்.
ஆராய்ந்து பாருங்கள்
எனினும் நீங்கள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமெனில் பல வங்கிகளின் விகிதத்தினை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எனினும் ஏற்கனவே கடன் வாங்கியோருக்கு இது கூடுதலாகவே இருக்கும்.
அந்த வகையில் நாம் இன்று சில வட்டி குறைந்த வங்கிகள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.
வட்டி விகிதம் எவ்வளவு?
ரூ. 30 லட்சத்திற்கு கீழாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு எவ்வளவு வட்டி என்பதை தான் இந்த பட்டியலில் பார்க்க இருக்கிறோம்.
- சென்ட்ரல் பேங்க் - 7.50% மேல்
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 7.75 - 9.40%
- ஐடிபிஐ வங்கி - 8 - 11.15%
- கரூர் வைஸ்யா வங்கி - 8.05 - 10.30%
- ஆக்ஸிஸ் வங்கி - 8.10 - 8.55%
- கர்நாடகா வங்கி - 8.24 - 9.49%
- தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி - 8.3%
- பேங்க் ஆப் மகராஷ்டிரா - 8.30 - 10.25%
மேற்கண்ட வட்டி விகிதங்கள் உங்கள் சிபில் ஸ்கோரின் அடிப்படையில் மாறும். இது அக்டோபர் 7 நிலவரப்படி எடுக்கப்பட்டது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications