இன்றைய நெருக்கடியாக காலகட்டத்திலும் முதலீட்டுக்கு பங்கமில்லாத, ஒரு பாதுகாப்பான முதலீடு எனில், அது வங்கி டெபாசிட் தான்.
வட்டி குறைவாக இருந்தாலும், எந்தவித பிரச்சனையும் இல்லாத ஒரு முதலீடு. குறைந்த அளவிலான லாபம் என்றாலும், தொடர்ச்சியான கணிசமான லாபம் கொடுக்க கூடிய முதலீடு.
இன்றைய கொரோனா காலகட்டத்தில் ரெப்போ விகிதம் குறைவாக உள்ள நிலையில், வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களையும் குறைவாகவே வைத்துள்ளன.
வட்டி விகிதம் எப்படி?
எனினும் சில வங்கிகள் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்கள் சற்று அதிகம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 1 - 2 வருடங்களுக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தினை தான். இது பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாகும். கீழ்கண்ட இந்த வட்டி விகிதங்கள் 1 கோடி ரூபாய்க்கும் கீழாக டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். இதில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
அதிக வட்டி தரும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1 - 2 வருடங்களுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 7% ஆகும்.
சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.75% ஆகும்.
டிசிபி வங்கியில் வட்டி விகித வருடத்திற்கு 6.70%-மாகும்.
Array
இதே இந்தஸ்இந்த் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.50% ஆகும். இது 1 -2 வருட டெபசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
யெஸ் வங்கியில் 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமாகும்.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமாகும்.
இதே ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில், 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.40% வட்டி விகிதமாகும்.
Array
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியில், 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.35% வட்டி விகிதமாகும்
ஆர்பிஎல் வங்கியில் 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி விகிதமாகும்
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1 -2 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.20% வட்டி விகிதமாகும்.


Click it and Unblock the Notifications