ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க, இன்று பலருக்கும் உதவுவது கல்விக் கடன் தான்.
இன்றைய காலக்கட்டத்தில் தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு, இன்னும் சில சலுகைகளுக்காக மக்கள் பெரும் அளவில் கல்விக் கடனுக்காக பொதுத்துறை வங்கிகளையே நாடுகின்றனர்.
அதிலும் இந்தியா மற்றும் வெளி நாடுகள் சென்று பயில நினைக்கும் மாணவர்களுக்கும், பேருதவியாக இருப்பது கல்விக் கடன் தான்.
இது டியூசன் கட்டணம், ஹாஸ்டல், உணவு மற்றும் போக்குவரத்து மற்றும் நூலகம் இப்படி அனைத்து வகையான கட்டணங்களும் கடனாக பெற முடியும். இதனால் இது மாணவர்களின் கல்விக் கனவை நினைவாக்க பெரும் உதவிகரமாக உள்ளது.
வட்டி மட்டும் கட்ட வேண்டும்
அதோடு கல்விக் கடனை கல்வி பயிலும் காலத்தில் திரும்ப செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் நீங்கள் வாங்கும் கடனுக்கு வட்டியை கட்ட வேண்டிய நிலை இருக்கும். படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும், அல்லது கடனை திரும்ப செல்ல ஆரம்பிக்கும்போது, கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதற்காக வங்கிகள் குறிப்பிட்ட கால அவகாசத்தினை வழங்குகின்றன.
ஜாமின் கையெழுத்து
அதே போல கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும் மாணவர் கோரும் கடனை பொறுத்து அமையும். இதனை கடன் பெறும்போதே நீங்கள் வங்கிகளில் தெளிவாக கேட்டுக் கொள்ளலாம்.
எங்கு கல்விக் கடன் வாங்கலாம்
இப்படி கல்விக்காக கடன் வாங்க நினைக்கும் மாணவர்கள் எங்கு வட்டி குறைவு, எங்கு வாங்கலாம் என முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இடையில் ஏதேனும் சிக்கல் எனில் அதனால் கல்வி பாதிக்கப்பட கூடாது. ஆக முடிந்தமட்டில் பொதுத் துறை வங்கிகளில் வாங்கலாம்.
தற்போதைய வட்டி விகிதம்
பேங்க் ஆப் பரோடா வட்டி விகிதம் - 6.75%
யூனியன் பேங்க் - 6.80%
சென்ட்ரல் பேங்க் - 6.85%
பேங்க் ஆப் இந்தியா - 6.85%
எஸ்பிஐ - 6.85%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.90%
கனரா வங்கி - 6.90%
பேங்க் ஆஃப் மஹராஷ்டிரா - 7.05%
இந்தியன் வங்கி - 7.15%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.25%


Click it and Unblock the Notifications