ஆதார் அட்டையில் அப்படி என்னதான் இருக்கு??

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

சென்னை: மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொருட் செலவில் ஆதார் அட்டை வழங்கி வருகிறது. இப்பணி 85 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆதார் அட்டையை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருந்தால் மிகவும் தவறு.

உங்களிடம் ஏற்கனவே ஆதார் அட்டை இருந்தால் நல்லது. இருப்பினும், இப்போது தான் நீங்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதனை வைத்திருப்பதால் கிடைக்கும் சில பயன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

(மணிக்கு ரூ.342.. சம்பளம்! கண்ணு பட போகுது பாஸ் சுத்தி போடுங்க...)

தனித்த அடையாளம்

ஆதார் அட்டையில் தனித்த எண் இருப்பதால், அதனை போலியாக உருவாக்குவது கடினம். அதற்கு காரணம் நம் பயோமெட்ரிக்ஸ் தகவல் உடன் அதாவது கை விரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை மற்றும் முகம் போன்ற பல தகவல்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எளிமையான வடிவமைப்பு

ஆதார் என்பது உலகளாவிய எண்ணாகும். சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டு பயனீட்டாளரின் அடையாளத்தை நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏஜென்சிகளும் சேவை மையங்களும் உறுதி செய்து கொள்ளலாம்.

மின்னணு பணமாற்றல் பயன்கள்

UID-யுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மூலமாக பாதுகாப்பான முறையில் குறைந்த செலவில், பயனீட்டாளரின் கணக்கில் பணத்தை பரிமாற்றம் முடியும்.

ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம்

இந்த ஆதார் அட்டையின் மூலம் வங்கி பரிமாற்றத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதனால் வங்கிச் சேவையில் தரம் மேம்படும். இந்த அட்டையின் எந்த ஒரு ஏஜென்சிகளுக்கும் பயனீட்டாளரின் அடையாளத்தை சரிப்பார்க்க முடியும், மேலும் இத்தகவல்கள் 100% உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

சுய சேவை பயனீட்டாளர்கள்

ஆதார் அட்டையை மத்திய அரசால் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு அடையாள ஆவணம், இந்த அட்டையின் மூலம் பயனாளிகள் தங்களின் உரிமைத் தகுதி, கோரிக்கை சேவைகள் மற்றும் தாங்கள் எழுப்பியுள்ள புகார்களை பற்றி இன்றைய தேதி வரையிலான தகவல்களை தங்களின் கைப்பேசி மூலமாக, kiosks மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 Benefits of Having a Aadhaar Card

If you already have a Aadhaar card then well and good. However, if you are still thinking of applying for one then here are a few benefits why you should have one.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns