பங்கு வர்த்தகர்கள் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!!

சென்னை: பங்குச் சந்தை வர்த்தகம் இன்று பல தனிநபர்களின் வாழ்வாதாரத்தின் வழிமுறையாகியுள்ளது. எனினும், முதலீட்டாளர்கள் வசம் விஞ்ஞான கருவிகள் இருந்தும் இது சாதாரண காரியம் அல்ல.

லாபத்தை அதிகரிக்க சில அடிப்படையான விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறந்தவற்றை பெறுதல்

சிறந்தவற்றை பெறுதல்

சிலநேரங்களில் நாம் நல்ல பணம் சம்பாதித்து இருப்போம், ஆனால் அதிக லாபத்தை வேண்டி செய்ய முதலீட்டில் வீணாய் காலத்தை போக்குவோம். இத்தகைய காலகாத்திருப்பு நம்முடைய முதலீட்டிற்கு மிகவும் பாதகமானது

உதாரணதிற்கு, PNB வங்கியின் 1250 பங்குகளை ரூ.170க்கு வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். அதன் விலை 175 ஆக உயர்கிறது. இந்த பங்குகளை விற்று ரூ.6250லாபம் கொள்ளலாம். அதற்கு பதிலாக ரூ.180 உயரும் வரை காத்திருந்து ரூ.165க்கு சென்றால் ரூ.6250 லாபம் ஈட்ட இருந்த நிலையில் ரூ.6250 நஷ்டம் அடைவோம்

எனவே பேராசையை விடுத்து லாபம் அடைவதே சிறப்பு.

 

நஷ்டத்தை அதிகரிக்க விடுதல்

நஷ்டத்தை அதிகரிக்க விடுதல்

நஷ்டங்களை தவிர்ப்பது நல்லது. மேற்கூறிய எடுத்துக்காட்டில் ரூ.2000 நஷ்டமடைந்தால் அந்த பங்குகளை வேறு ஒருவருக்கு விற்க நேரிடும்.

ஆனால், அவ்வாறு நீங்கள் PNB பங்குகளை விற்கவில்லை என்றால், கூடுதல் பணத்தை இழக்க நேரிடும்.

 

சராசரியாக

சராசரியாக

முதலீட்டாளர்கள் செய்யும் இன்னொரு தவறும் இருக்கிறது. PNB இன் 1250 பங்குகளை ரூ.170க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். விலை ரூ.168க்கு குறைகிறது, மேலும் 1250 பங்குகளை வாங்குகிறோம்.

பங்கு இப்பொழுது ரூ.165க்கு போகிறது. முதலில் 1250பங்குகள் மட்டுமே இருந்ததால் இழப்பை பொறுத்துக் கொள்ள முடியும். இப்பொழுது மேலும் 1250 பங்குகள் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பங்குகள் முறிவடைந்துள்ளன.

இப்பொழுது நீங்கள் 2500 பங்குகளில் நஷ்டம் அடைந்துள்ளீர்கள், முன்பு வாங்கிய 1250 பங்குகளுக்கு மட்டுமல்ல. இழப்புகள் பெருக பெருக, நடுத்தரமாக சிறிய அளவிலேயே பங்குகள் வாங்க வேண்டும்.

 

முன்கூட்டியே திட்டமிடாமல் இருத்தல்

முன்கூட்டியே திட்டமிடாமல் இருத்தல்

வர்த்தகர் பங்குச் சந்தைக்குள் நுழையும் முன் திட்டமிட வேண்டும். நல்ல போக்குடைய பங்குகளை பின்தொடர வேண்டும்.

ஈட்ட நினைக்கும் லாபத்தையும், பொறுத்துக் கொள்ள இயலும் நஷ்டத்தையும் குறித்துக் கொள்ள வேண்டும். பங்குகளை பின்தொடரவும், சந்தையின் தொழில்நுட்ப விடயங்களை புரிந்து கொள்ளவும் வேண்டும்.

 

பங்குகளை வாங்குவது விற்பது

பங்குகளை வாங்குவது விற்பது

இது ஒரு ஆபத்தான வர்த்தகமாகும். உதாரணத்திற்கு,வருங்கால சந்தையில் நீங்கள் முடிவு எட்டப்படும் முன்பே அல்லது முக்கிய நிகழ்வுக்கு முன்பே நிலையை எடுத்துக் கொள்கிறீர்கள்.

உதாரணமாக, இந்திய ஸ்டேட் வங்கியின் முடிவுகளை அல்லது நாணய கொள்கைகளை அறியும் முன் அதில் ஒரு நிலையை எடுத்துக்கொள்கிறீர்கள், அது ஆபத்தானவை. சந்தை நிகழ்வை நோக்கி செல்லாமலிருக்கும் பொழுது பங்குகளை வாங்குவது நல்லது..

 

கடன் வாங்கி பங்குகள் வாங்கும் நிலை

கடன் வாங்கி பங்குகள் வாங்கும் நிலை

இதன் அர்த்தம் நம் திறமையை தாண்டிய நிலையில் நுழைவது. பழைய நஷ்டங்களை ஈடு கட்ட பணத்தை பெருக்கிக் கொள்கிறீர்கள். இது சூதாட்டம் போன்றது. இழப்புகளை ஏற்றுக்கொள்வதும், கடன் வாங்கி பங்குகள் வாங்குவதை தவிர்ப்பதுமே இதில் உள்ள மந்திரம்.

மற்றவரை பின்பற்றுதல்

மற்றவரை பின்பற்றுதல்

சந்தை வதந்திகளின் அடிப்படையில் வாங்கக் கூடாது. வந்தந்திகள் பொய்யெனில் இது பெரிய ஆபத்தில் கொண்டு சேர்க்கும். சந்தையை பற்றிய நீண்ட ஆய்வுக்குப் பின் பங்குகள் வாங்குவது உத்தமம்.

ஒரே நேரத்தில் பங்குகள், பொருட்களின் மற்றும் செலாவணி வாங்குதல்

 

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்

ஒரே நேரத்தில் எல்லா சந்தைகளையும் பின்பற்றுவது கடினம். நீங்கள் பங்குகள் வாங்கும் வர்த்தகர் எனில் தங்கம், கச்சா எண்ணெய் அல்லது செலாவணி சந்தைகளில் இருந்து விலகியே இருங்கள். எல்லா சந்தைகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க இயலாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+