சென்னை: நம்ம நாட்ல கிரெடிட் கார்டு (credit card) பில் கட்டி அழிஞ்சவங்க கணக்கு சொல்லி மாளாது.. கிரெடிட் கார்டில் நாம் வைத்திருக்கும் பேலன்ஸ் நம் நிதி நிலையில் பெரும் பங்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகைக்கு, வங்கிகள் வருடத்திற்குச் சுமார் 36 முதல் 40 சதவிகித வட்டியை வசூலித்து வருகிறது.
நீங்கள் திடீரென்று உங்களுடைய கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடிக்காமலேயே இருப்பதை உணர்வீர்கள். ஏனென்றால் பேலன்ஸ் வைத்திருக்கும் தொகைக்கான வட்டி மிகவும் அதிகமாக உள்ளதால் காலம் முழுக்க வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இருப்போம். இந்த நிலையை அப்படியே தொடர்வது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தான் கூற வேண்டும். இதைச் சரி செய்ய வேறொரு வழி உள்ளது. உங்களுடைய கிரேடிட் கார்டு பேலன்ஸ் தொகையை ஒரு தனிநபர் கடனாக மாற்றுங்கள் (personal loan). பெரும்பாலான வங்கிகள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை ஒரு தனிநபர் கடனாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பில்களைச் சரியாகச் செலுத்தி வந்தால் வங்கியிலிருந்து உங்களை அழைத்து உங்கள் பாக்கியை மாதாந்திர தவணையில் செலுத்தும் ஒரு கடனாக மாற்றிக்கொள்ள விருப்பமுள்ளதா என உங்களைக் கேட்கவும் செய்கிறார்கள். கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகை மிகவும் குறைவாக இருக்கும் போது மட்டுமே, வங்கிகள் மேலும் உங்களைக் கடனாளியாக்க பேலன்ஸ் தொகையோடு கூடதல் கடன் அளிப்பதாக ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் தனி நபர் கடனுக்கு வருடத்திற்கு 14-18 சதவிகிதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன. அவ்வாறு நீங்கள் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கான சேவை வரியையும் நீங்கள் செலுத்த நேரிடும். இது 36 முதல் 40 சதவிகித வட்டியை ஒப்பிடும் போது பல மடங்கு குறைவு. நீங்கள் மாத தவணையை உரிய நேரத்தில் செலுத்துபவராகவோ அல்லது கடன் நம்பகத்தன்மைக்கு உரியவராகவோ இருந்தால் மட்டுமே வங்கிகளில் இருந்து இத்தகைய அழைப்பு வரும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு கடனை வைத்திருந்து மாதாந்திர செலவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றால், அவர்கள் உங்களைக் கடனை நீட்டிக்கச் சொல்லி நிர்பந்தம் செய்யலாம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற தனிநபர் கடன்களை நாடுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் செலவுகளைக் கவனமாகச் செய்யுங்கள்..கஷ்டங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்..
காலம் முழுக்க வட்டி மட்டும் தான்...
சூப்பரான வழி
தனி நபர் கடன்
வங்கியில் இருந்து அழைப்பு
இந்த அழைப்பு எப்போது வரும்...
வட்டி வகிதம்
மிகவும் குறைவு..
மாத தவணை
உஷார் மக்களே
முடிவுரை
உஷார்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications