டாலர் மதிப்பு உயர்வால் எட்டாக் கனியாகும் வெளிநாட்டுப் படிப்பு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இது இந்திய ரூபாய்க்குக் கெட்டகாலம். கடந்த சில வாரமாகத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் வெளிநாடு சென்று படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் மற்றும் வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் கடந்த மாதம் நிலவி வந்த 62.24 என்ற மதிப்பிலிருந்து தற்போது 64.15 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.

வாங்க இது என்னனு பார்ப்போம்

வாங்க இது என்னனு பார்ப்போம்

சரி, இப்ப நீங்க ஒரு மாதத்திற்கு முன் வெளியூர் செல்வதற்காக 5 லட்சம் ரூபாயை மாற்றியிருந்தால், உங்களுக்கு ஏறக்குறைய 8,033 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால் அதை நீங்கள் தற்போது 64.15 ரூபாய் என்ற விலையில் மாற்றினால் உங்களுக்குக் கிடைப்பது 7,794 டாலர்கள் மட்டுமே.

16,000 ரூபாய் இழப்பு

16,000 ரூபாய் இழப்பு

ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்குக் கிடைக்கும் டாலர் அளவில் 250 டாலர் வரை அல்லது 16,000 ரூபாய் நாணய மதிப்புக் குறைவால் இழப்பு ஏற்படும்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

இங்குக் கூறப்பட்டுள்ள பரிமாற்ற மதிப்பு வங்கிகளுக்கு இடையிலானது. நீங்கள் நடைமுறையில் ஒரு அங்கிகரிக்கப்பட்ட முகமையில் டாலர்களை அல்லது பயணியர் காசோலைகளை வாங்கும்போது நீங்கள் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.

கவலை வேண்டாம்
 

கவலை வேண்டாம்

சரி...முடிவா என்னதான் சொல்ல வர்றீங்கன்னு நீங்க கேக்குறது புரியுது.

அதாவது வெளிநாடுகளுக்குப் பயணமாகும் மாணவர்கள் இன்னும் அதிகம் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும் எனக் கவலை கொள்ளத் தேவையில்லை.

ஒரு மாத சரிவு..

ஒரு மாத சரிவு..

ரூபாய் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவிலான வீழ்ச்சியைக் கண்டுவிட்டதால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் இல்லை.

விலை மாற்றம்

விலை மாற்றம்

அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்கு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 63 முதல் 64 ரூபாய் என்ற வரையறைக்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Studying Abroad Becomes Expensive As Dollar Turns Costly

It's a bad time of the year for the rupee to fall against the dollar, especially for students who are making travel plans to study abroad or for payment of fees to universities abroad.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X