இனி ரெக்கரிங் டெபாசிட் வருமானத்திற்கும் வரி உண்டு..

சென்னை: 2015-16ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி கசுழற்சி வைப்பு நிதி ( Recurring Deposits) திட்டத்தைக் கால அளவைப் பொருத்த வைப்பு நிதிகளில் (Time deposits) சேர்க்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இரண்டுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் TDS தான். நிலையான வைப்பு நிதியில் ரூ.10,000-க்கும் மேல் வட்டி வருமானம் அதிகரிக்கும் போது வரி விதிக்கப்படுகிறது. இந்த விதி இப்பொழுது சுழற்சி வைப்பு நிதிகளுக்கும் பொருந்தும் என்பது தான் மாற்றம்.

பட்ஜெட்க்கு முன்

பட்ஜெட்க்கு முன்

2015-16-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னர் இவ்வாறு நேரடி வரிக் குறைப்பு இல்லை (TDS). அதாவது, ஒவ்வொரு மாதமும் பெரியளவிலான தொகைகளுக்காக நீங்கள் சுழற்சி வைப்பு நிதிகளைத் தொடங்கலாம் - அதுவும் TDS இல்லாமலேயே!

 வருமான வரி..

வருமான வரி..

நீங்கள் வரியைச் செலுத்தும் போது மட்டும், உங்களுக்குக் வட்டியில் கிடைத்த வருமானத்தைத் தனியாகக் காட்ட வேண்டும். இந்த விருப்பம் இப்பொழுது தடுக்கப்பட்டு விட்டது மற்றும் 15G/H-ஐ நீங்கள் சமர்ப்பிக்காவிட்டால் உடனடியாக TDS பிடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுழற்சி வைப்பு நிதிக்காக TDS கணக்கீடு

சுழற்சி வைப்பு நிதிக்காக TDS கணக்கீடு

ஒரு அமைப்பான வழிமுறையில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க உதவும் விதத்திலானது தான் இந்தச் சுழற்சி வைப்பு நிதியாகும்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

நீங்கள் மாதத்திற்கு ரூ.10,000 வீதம், 24 மாதங்களுக்கு ரூ.2,40,000-ஐ இரண்டு ஆண்டுகளில் சேமிக்க முடியும்.

இதில் ரூ.12,000-ஐ நீங்கள் வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் பெற்றால், முந்தைய ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு TDS பிடிக்கப்படவில்லை. ஆனால், இப்பொழுதைய விதிப்படி வங்கிகள் நேரடியாக 10%-ஐ வரியாகப் பிடித்துக் கொள்வார்கள்.

 

வட்டி லாபம்

வட்டி லாபம்

இதன் மூலம் மற்ற கட்டணங்களுடன் சேர்த்து, உங்களுக்குக் கிடைப்பது 10 சதவீதத்திற்கும் குறைவான வட்டி லாபம் மட்டுமே பெறுவீர்கள்.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

உங்களுடைய சுழற்சி வைப்பு நிதியைப் பிரித்து, வேறு வேறு வங்கிகளில் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த வழியிலிரும் இந்த நேரடி வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நீங்கள், ரூ.2.5 இலட்சம் வருமானத்திற்குள் இருந்து, வருமான வரி செலுத்தாதவராக இருக்கும் நிலையைத் தவிர, வேறு நிலைகளில் இது சரியான தீர்வல்ல.

இது அரசின் சிறந்த நடவடிக்கை

இது அரசின் சிறந்த நடவடிக்கை

கால வரம்பிற்குட்ட வைப்பு நிதிகளில் சுழற்சி வைப்பு நிதியைக் கொண்டு வந்தது மிகவும் சிறப்பான செயல்பாடாகும். இந்த இரண்டையும் பிரித்து வைப்பதில் எந்தவிதமான பொருளும் இல்லை. அதிலும், ஒன்றுக்கு TDS, மற்றொன்றுக்குக் கிடையாது என்பதும் பொருந்தாத விஷயமாகவே இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+