நிறுவன வைப்பு நிதியில் முதலீடு செய்யும் முன் நாம் கவனிக்க வேண்டிவை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வங்கி வைப்பு நிதி எவ்வளவு பாதுகாப்பானதோ அதே அளவிற்கு நிறுவன ஃபிக்சட் டெபாசிட்டுகள் ஆபத்தானது. ஒரு நிறுவனம் சிறந்த முறையில் செயல்படவில்லையெனில், அசல் மற்றும் வட்டிப் பணம் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இதில் லாபம் மிகவும் அதிகம்.

 

எனவே, நிறுவன டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், நம்முடைய முதலீட்டைப் பாதுகாக்க சில வழிமுறைகளையும், வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

கிரெடிட் ரேட்டிங் (கடன் திட்ட மதிப்பீடு)

கிரெடிட் ரேட்டிங் (கடன் திட்ட மதிப்பீடு)

நிறுவன ஃபிக்சட் டெபாசிட்டில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை ஒன்று, கிரெடிட் ரேட்டிங். பெரும்பாலான நிறுவனங்கள், கிர்சில், ஐசிஆர்ஏ மற்றும் கேர் போன்ற முன்னணி கிரெடிட் ரேட்டிங் முகவர்கள் மூலம் கிரெடெட் ரேட்டிங் வழங்குகின்றன.

மதிப்பீடுகள்

மதிப்பீடுகள்

வட்டித் தொகை மற்றும் அசல் ஆகியவை சரியான நேரத்தில் செலுத்தப்படுதல் தொடர்பாக, "ஏஏஏ" ரேட்டிங் அதிகப் பாதுகாப்பைக் குறிக்கிறது.

தவறு ஏற்படக்கூடிய மிக அதிக ஆபத்தான நிறுவனங்களுக்கு, கிரைசில் "சி" ரேட்டிங் கொடுக்கிறது. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

பெரும்பாலான பகுப்பாய்வுகள், இவ்வாறான முகவர்கள் மூலம் செய்யப்படுகின்றன என்பதால், முதலீட்டாளர் பக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்யப்படவேண்டிய தேவை இல்லை. பல வருடங்களாக இந்த முகவர்கள் மூலமாகச் செய்யப்படும் பகுப்பாய்வுகள் நம்பகரமாக உள்ளன எனத் தெரியவந்துள்ளன.

 

நிறுவனத்தின் ட்ராக் ரெக்கார்டை கவனித்தல்
 

நிறுவனத்தின் ட்ராக் ரெக்கார்டை கவனித்தல்

ஒரு நிறுவன வைப்பு நிதியில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் ட்ராக் ரெக்கார்டை கவனிக்க வேண்டும். தொடர்ந்து சரியான முறையில் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) செலுத்தப்பட்டிருந்தால், டெப்பாசிட் சேவைகளை, அந்த நிறுவனம் நல்லமுறையில் வழங்க முடியும் எனக் கூறலாம்.

பணப் பரிமாற்றங்கள்( கேஸ் ஃபுளோ) மற்றும் நிறுவன பரம்பரை வரலாற்றையும் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக, தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்விஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை ஃபிக்சட் டெபாசிட் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் பரம்பரை வரலாறு உறுதியாக இருப்பதால், இவற்றின் டெபாசிட்டுகள் பாதுகாப்பானவை எனக் கருதலாம். உதாரணமாக, மஹிந்திரா குரூப்பில் இருந்து, மகிந்திரா ஃபைனாஸும், பஜாஜ் ஸ்டேபிளில் இருந்து பஜாஜ் ஃபைனான்ஸும் வந்துள்ளன.

 

வட்டிப் பணக் கொடுப்பனவைக் கவனித்தல்

வட்டிப் பணக் கொடுப்பனவைக் கவனித்தல்

நிறுவன டெபாசிட்டுகளில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எப்போது உங்களுக்கு வட்டிப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உங்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.

உதாரணமாக, மாதாந்திர ஆப்ஷன், காலாண்டு ஆப்ஷன் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை. நீங்கள் பணி ஓய்வுபெற்ற ஒருவராக இருந்தால், மாதாந்திர அல்லது அரையாண்டு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே வேலைசெய்து கொண்டிருக்கும் ஒருவராக இருந்தால், உங்கள் செல்வத்தை அதிகரிக்க, கியூமுலேடிவ்(ஒட்டுமொத்தமான) ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

 

முன்கூடிய திரும்பப் பெறுதல்

முன்கூடிய திரும்பப் பெறுதல்

முன்கூடிய திரும்பப் பெறுதலால், நீங்கள் இழக்கவிருக்கும் தொகையைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, சில நிறுவனங்கள், மூன்று மாத காலத்திற்கு முன்னர் டெபாசிட்டைத் திரும்பப் பெறுவதை அனுமதிப்பதில்லை. வேறு பல நிறுவனங்கள், மூன்று மாத காலத்திற்கு முன்னர் நீங்கள் டெப்பாசிட்டைத் திரும்பப் பெற்றால், படுமோசமான குறைந்த வட்டி விகிதமே, அதாவது 4 சகவிகித வட்டியே வழங்குகின்றன.

எனவே, முதலீடு செய்வதற்கு முன்னர், நிறுவனத்தின் விதி நிபந்தனை ஆவணங்களைப் படித்துப் பார்ப்பது சிறந்தது. மேலே கூறப்பட்ட குறிப்புகள் பற்றி, உங்கள் நிதி ஆலோசகரிடமும் கேட்கலாம்.

 

ஈசிஎஸ் தேர்வு

ஈசிஎஸ் தேர்வு

குறிப்பிட்ட கால இடைவெளியில், முறையாக வட்டிப் பணம்பெறும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், ஈசிஎஸ் பேமெண்டைத் தேர்வு செய்வது சிறப்பானது. ஏனென்றால், ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டும், உங்கள் காசோலைக்காக நீங்கள் காத்திருந்து, அது உங்கள் கையில் கிடைத்த பின்னர், உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டியிருக்கும். மேலும் தபால் தொலைந்து போகும் வாய்ப்புகளையும் தவிர்க்கலாம்.

சரியான முறையில் உங்கள் பணம் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படுவதற்கு, உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

 

வங்கி IFSC குறியீடு

வங்கி IFSC குறியீடு

சரியான வங்கி IFSC குறியீட்டை தேடி அழைய வேண்டாம்.. தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு வாங்க போதும்..

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Things To Check Before Investing In A Company Fixed Deposit

Company fixed deposits are risky and if a particular company is doing badly, there is a chance of a default in payment of principal and interest. Company deposits are not secure deposits as compared to a bank deposit.
Story first published: Wednesday, September 23, 2015, 14:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X