வேலை இழந்தால் கடன்களைச் சமாளிப்பது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இப்படி ஒரு செய்தியா..? என்று நீங்கள் முகம் சுளித்தாலும், வாழ்க்கையில் இத்தகைய சூழ்நிலையை சமாளிக்கும் திறன் மற்றும் திட்டத்தை வைத்திருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு உகந்தது.

வாழ்வதற்குப் பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாம் செய்யும் தொழில் அல்லது வேலை. வேலைக் கையிலிருந்தால் யார் வெண்டுமானாலும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் நிம்மதியான எதிர்காலத்திற்குத் திட்டமிடலாம். ஆனால் சில சமயங்களில் இந்த வருமானம் தேவையைச் சரிக்கட்ட போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறான தருணங்களில் கடன்களும் உதவக்கூடும்.

ஆனால், இந்தக் கடன்கள் நீங்கள் உங்கள் வேலை அல்லது தொழிலை இழக்க நேரிட்டால் பெரும் தலைவலியாக மாறவும் வாய்ப்புண்டு.

மாதாந்திர தவணைகளைக் கூடச் செலுத்துவது அந்தத் தருணங்களில் கடினமாவதோடு செலுத்த தவறும் பட்சத்தில் சட்டரீதியான பிரச்சனைகளையும் நமக்கு வந்து சேரும். இது போன்ற நேரங்களில் கடன்களைச் சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.

(இன்ஜினியரிங் பட்டதாரிகள் படும்பாடு சொல்லி மாளாது!! நீங்களே படிங்க..)(இன்ஜினியரிங் பட்டதாரிகள் படும்பாடு சொல்லி மாளாது!! நீங்களே படிங்க..)

1. உங்களிடம் உள்ள நிதிச் சொத்துக்களை மதிப்பிடுங்கள்

1. உங்களிடம் உள்ள நிதிச் சொத்துக்களை மதிப்பிடுங்கள்

ஒரு கடனை வாங்குவதற்கு முன் ஒருவர் தன்னிடம் உள்ள நிதிச் சொத்துக்களை மதிப்பிட வேண்டியது கண்டிப்பாக அவசியம். காப்பீடுகள், பரஸ்பர நிதிகள் (Mutual funds), கடன் பத்திரங்கள், பிஎஃப் மற்றும் கிராஜுவிடி ஆகியவை இதன் கீழ் வரும்.

இவற்றைக் குறித்த சரியான ஒரு மதிப்பீடு எவ்வளவு கடனை நீங்கள் வங்காலாம் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும், ஒருவேளை உங்கள் வருமானம் நின்றுபோனாலும் உங்களுக்குத் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் உதவும்.

 

 

2. கடன்களை முன்னுரிமை படுத்திக் கொள்ளுங்கள்

2. கடன்களை முன்னுரிமை படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பல கடன்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை அனைத்தையும் செலுத்துவது கடினமாக இருக்கலாம். இவ்வாறான தருணங்களில், கடன்களை அவற்றின் முக்கியத்திற்கு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது அவசியம்

3. சொத்துக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்

3. சொத்துக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்

வேலையிழப்பது ஒரு பெரிய நரகம். அதிலும் ஏதாவது கடன் பாக்கி இருந்தால் அது அதைவிடக் கொடுமை. இந்த மாதிரி நிலைமைகளில், நமக்கு அதிகத் தேவைப் படாத சிலவற்றை நாம் வைத்துக் கொண்டிருக்க விரும்புவோம். வருமானம் தடைப்படும் வேளைகளில் இவை ஒரு சுமையாக இருக்கும் என்பதுடன் இவற்றை விற்றுவிடுவது கடனை திருப்பிச் செலுத்துவதிலும் உதவும்.

4. உங்கள் வங்கியில் பேசிப்பாருங்களேன்

4. உங்கள் வங்கியில் பேசிப்பாருங்களேன்

எவ்வளவு மோசமான நிலைமையாக இருந்தாலும் கடன் கொடுத்த வங்கியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பலனைத் தரலாம். நமக்குள்ள நெருக்கடிகளில் நாம் குழப்பமடைந்து ஒரு முடிவிற்கு அல்லது வழியை அடைய முடியாமலோ போகலாம். ஆனால் வங்கிகள் தங்களுடைய அனுபவத்தில் நமக்கு உதவக்கூடிய சில ஆலோசனைகளை வழங்கக்கூடும்.

நெருக்கடியான சமயங்களில் ஒரு வேளை வங்கிகள் இல்லையென்றால், ஒரு நிதி ஆலோசகரை அணுகுங்கள். நிதி நிலைமைகளைப் பற்றிய விஷயங்களில் அவர்கள் வல்லுனர்கள் என்பதால் அவர்கள் இத்தகையை நேரங்களை எப்படிச் சமாளிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tips to Manage Loans When You Lose Your Job

Money plays an important role in our lives and so does jobs. Having a job, anyone will feel financial freedom and can plan for a pleasant future. Here the ways to manage loan in case one looses his/her job.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X