என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபமா..? நஷ்டமா..?

சென்னை: தேசிய ஓய்வூதிய திட்டம், சில வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்றது தான். ஆனால், அது முதலீட்டாளர்களுக்குச் சிறந்த பயனை அளிக்கவில்லை என்று நிதி அமைச்சர் உணர்ந்தானாலோ என்னவோ, சில அருமையான பயன்கள் கிடைக்குமாறு இந்தத் திட்டத்தை மத்திய பட்ஜெட் 2015-ல் மாற்றியுள்ளார்.

வாருங்கள் தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது என்.பி.எஸ் திட்டத்தைப் பற்றி முழுமையான விபரங்களை இங்கே பார்ப்போம்..

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

இந்த வருடத்தில் ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தத் திட்டம் தற்போது பிரிவு 80 சிசிடி-யின் ஒரு அங்கமாக இருப்பதால், இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு ரூ.50,000/- கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.

பங்கு மற்றும் கடன் சந்தை முதலீடு

பங்கு மற்றும் கடன் சந்தை முதலீடு

இந்தத் திட்டத்தால் கிடைக்கும் மற்றொரு பயன் - இனி ஒருவர் பங்குச்சந்தையில் கூட முதலீடு செய்யலாம். அதனால் உங்கள் நிதியை எந்த (பங்கு அல்லது கடன்) சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை உங்களது இடர்பாடு அளவு, வயது போன்ற காரணிகளைக் கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வரம்பு

வரம்பு

முதலீட்டாளர்களின் நலனைக் காக்க மத்திய அரசு முதலீட்டு வரம்பை 50 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு இதன் மீது நம்பிக்கை இல்லையென்றாலும், தங்கள் சேமிப்பை பங்குச்சந்தையில் உபயோகப்படுத்த சிலருக்கு இது உதவும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

என்.பி.எஸ் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டம், இன்ஷூரன்ஸ் அண்ட் ரெகுலேட்டரி டெவெலப்மெண்ட் ஆஃப் இந்தியாவின் (ஐ.ஆர்.டி.ஏ) கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஒவ்வொரு பணியாளருக்கும் ஓய்வூதிய எண் கொடுக்கப்படும். ஒவ்வொரு நபரும் தங்களது முதலீடுகளை அதற்கேற்ப பின்பற்றலாம்.

தற்போதைய தருணத்தில், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரி விலக்குப் பயன்களைப் பெற, அச்சிடப்பட்ட உங்கள் அறிக்கையையும் பயன்படுத்தலாம்.

 

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

இந்த வருடம், கூடுதலாக ரூ.50,000/-க்கு ஒருவர் வரி விலக்குப் பயன்களைப் பெற்றாலும், அது மட்டுமே முதலீடாகப் பார்க்காமல் ஓய்வூதியம் அடிப்படையில் நிரந்தர வருமானத்தை உருவாக்கிட முற்படுங்கள்.

இதன் அடிப்படையில், இந்த வருடம் ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தாலும் அதிகளவிலான லாபத்தைப் பெற முடியாது, இதனால் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்தை உருவாக அறிவுறுத்தப்பட மாட்டாது. இதில் 50 சதவீத வரம்பு இருந்தாலும் கூட, இது நல்லதொரு விகிதமாக இருக்காது.

 

வரி விலக்கு

வரி விலக்கு

வரி விலக்கு மற்றும் பங்கில் முதலீடு செய்யும் வசதிகளைத் தவிரப் புதிய என்.பி.எஸ். திட்டத்தில் பெரிதாக எதையும் வழங்கி விடவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+