சென்னை: பெரும்பாலானோர் இன்னைக்கு ஒரு கிரெடிட் கார்டுக்கும் அதிகமாகத்தான் வச்சிருக்காங்க. ஒன்னு யாராவது சேல்ஸ்மேன் ஆசைகாட்டி உங்கத் தலைல அதக்கட்டிட்டு போயிருபாரு. இல்லன்னா அதுல கிடைக்கிற ரிவார்ட் பாயின்டுகளுக்கு நீங்க பலிகடா ஆகியிருப்பீங்க.
திடீர்னு ஒருத்தர் தாங்கிட்ட 5 கார்டு இருக்கறத உணருகிறார். பிரச்சனை என்னன்னா, அதுல சிலத ஒப்படைக்க நினைக்குறாரு. இங்கதான் பிரச்சனையே ஆரம்பமாகுது.

குத்துமதிப்பா நீங்க ஒரு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கமுடியும்னு வச்சுகுங்க. இந்த கிரெடிட் கார்டுல சிலத ரத்து செஞ்சா உங்களுடைய கடன் வாங்கும் அளவு குறைஞ்சு போவதுடன் உங்களுடைய சிபில் எனப்படும் கடன்பெறும் திறன் மதிப்பீட்டுப் புள்ளிகளும் குறையும்.
கிரெடிட் கார்டை ரத்து செய்தல்
உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்வதற்கு முன் ஓரிரு முறை யோசிப்பது நல்லது. ஒருவேளை நீங்க சிலத ரத்து செய்யனும்னு முடிவு செஞ்சுட்டா அதற்கென்று இருக்கிற சில வழிமுறைகளை அவசியம் பின்பற்றனும்.

முதலில் கார்டை கொடுத்த வங்கியிடம் தெரிவித்து அதில் தானியங்கி கட்டணம் செலுத்தும் (இசிஎஸ்) அறிவுறுத்தல்கள் செயல்பாட்டில் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.
ரத்து செய்ய விரும்புகிற கார்டின் பெயரில் எந்தவித நிலுவைத் தொகையும் இல்லாமல் அனைத்தையும் நீங்கள் செலுத்திவிட்டீர்களா என்பதையும் உறுதிசெய்யவேண்டும்.
ஒரு கிரெடிட் கார்டினை ரத்து செய்ய உகந்த வழி வங்கிக்கு நேரடியாகச் சென்று அதை செய்வதுதான். உதாரணமாக இந்தஸ் இந்த் வங்கியின் கார்டை நீங்கள் வைத்திருந்தால் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று அதனை எளிதில் செய்துவிட முடியும்.

வங்கியிடமிருந்து கார்டை ரத்து செய்ததற்கான சான்று ஒன்றையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இதை சுலபமாகச் செய்ய கார்டை ரத்து செய்ய உங்கள் விருப்பத்தை கடிதமாக எழுதி வங்கியிடம் கொடுத்து ரத்து செய்ததற்கான அத்தாட்சியாக அந்த கடிதத்தில் முத்திரையப் பெற்றுக் கொள்ளவும்.
நீங்கள் ரத்து செய்ய விரும்பியபின் சில மாதங்களுக்கு முன்பாகவே அந்த கார்டின் பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள். அந்த வங்கியின் தொலைபேசி இணைப்பில் தொடர்புகொண்டு நீங்கள் ரத்து செய்ய விரும்புவதை தெரிவித்துவிடவேண்டும் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

மேலும் கார்டிர்கான வருடாந்திரக் கட்டணத்தை வங்கி விதிக்கும் சற்று முன்பே அதனை ரத்து செய்துவிடுவது நல்லது. இல்லையென்றால் அதையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு விஷயம், கார்டிர்கான செட்டில்மென்ட் அல்லது இறுதி நடைமுறைகள். அதனை நீங்கள் நெட் பாங்கிங் மூலம் செய்வதால் அதற்குண்டான வரவை அண்றே பெற்றுவிடலாம். என்ன எல்லாம் புரிஞ்சுகிட்டீங்களா?
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications