மோசமான சிபில் ஸ்கோருடன் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

பெங்களூரு: நல்ல சிபில் ஸ்கோர் புள்ளிகள் இல்லாதவர்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடும். அதுவும் பர்சனல் கடன் அல்லது வீட்டுக் கடன் என்றால் அதற்கான சாத்தியம் மிகவும் அதிகம்.

ஆனால் கன்ஸ்யுமர் ட்யுரபில் கடன் போன்ற சிறிய கடன்களுக்கெல்லாம் வங்கிகள் இந்தக் கடுமையான பாலிசிகளைப் பொருத்துவதில்லை.

உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாற இருக்கும் பட்சத்தில் பெரிய தொகைக்கான கடன் வங்கிகளால் நிராகரிக்கப்படும். அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கடன் பெறுவதற்கான மாற்று வழிகளையும் தேர்வுகளையும் தேட ஆரம்பிக்க வேண்டும். அதற்கான சில தீர்வுகள் இதோ:

வீட்டுக் கடனுக்கான இணை விண்ணப்பதாரரைத் தேடவும்

வீட்டுக் கடனுக்கான இணை விண்ணப்பதாரரைத் தேடவும்

உங்களது கிரேடிட் புள்ளிகள் குறைவாக இருந்தால், வீட்டுக் கடனுக்கு இணை விண்ணப்பதாரரைத் தேடவும். உங்கள் கணவன் அல்லது மனைவி வேலையில் இருந்து, நல்ல சிபில் புள்ளிகளையும் கொண்டிருந்தால், அது பெரிதும் பயன்படும். அப்படி இல்லையென்றால், நல்ல கிரேடிட் புள்ளிகளைக் கொண்டுள்ள உங்கள் சொந்தக்காரரையும் கூட இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறிய அளவிலான கடன் அளிக்கும் நிறுவனங்களைத் தேடவும்:

சிறிய அளவிலான கடன் அளிக்கும் நிறுவனங்களைத் தேடவும்:

உங்களுக்குக் கடன் அளிப்பதற்குப் பல சிறிய கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவர்களிடம் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி விகிதம் சற்றுக் கூடுதலாக இருக்கும்.

ஆனால் மோசமான கிரெடிட் புள்ளிகளைக் கொண்டவருக்கு வீட்டு நிதி நிறுவனமோ அல்லது புகழ்பெற்ற வங்கியோ கடன் அளிப்பது என்பது சந்தேகமான ஒன்று தான். அதனால் மற்ற தேர்வுகளையும் பார்க்கவும்.

 

பிணையத்திற்கு எதிரான கடன்கள்

பிணையத்திற்கு எதிரான கடன்கள்

உங்களிடம் அடமானம் வைக்க ஏதேனும் இருந்தால், வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்களது கிரெடிட் புள்ளிகளைப் பற்றி அக்கறை கொள்ளாது.

உதாரணத்திற்கு, தங்க நகைக்கு எதிராக நீங்கள் கடன் வாங்கும் போது, வங்கி சான்றுகள் என்ற கேள்விக்கே இங்கே இடம் இருக்காது. அதற்குக் காரணம், ஒரு வேளை நீங்கள் கடனை கட்ட முடியாமல் போனாலும் கூட, நிலுவையில் இருக்கும் தொகையை, அடைமானத்தில் வைத்துள்ள உங்கள் தங்க நகைகளை விற்று எடுத்துக் கொள்ளும் வங்கி. பங்குகளுக்கு எதிரான கடன்களுக்கும் இது பொருந்தும்.

 

குடும்பத்தாரிடம் இருந்து கடன் பெறுதல்

குடும்பத்தாரிடம் இருந்து கடன் பெறுதல்

ஒரு வேளை மோசமான சிபில் கிரேடிட் புள்ளிகளால் உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டிருந்தால், உங்களுக்குத் தேவையான கடனுக்காக, கடன் அளிக்க விருப்பப்படும் பிற குடும்ப உறுப்பினர்களை நீங்கள் அணுகலாம்.

சிறிய அளவிலான கடன அளிப்பவர்கள்

சிறிய அளவிலான கடன அளிப்பவர்கள்

அமைப்புச் சாரா பிரிவில் கடன் அளிக்க முன்வருபவர்கள் பலரை நீங்கள் காணலாம். இத்தகைய விதத்தில் கடன் அளிப்பது இன்னமும் கூடச் சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் நீடித்து வருகிறது. உங்களது நிதி சார்ந்த தேவைக்கு இந்த வழி ஒத்து வருகிறதா என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+