இந்தியாவில் என்ஆர்ஐ-கள் முதலீடு செய்ய அடக்கமான ஐந்து இடங்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இந்தியாவில் அதிக அளவில் வீடு மனைகளில் முதலீடு செய்வது அனைவரும் அறிந்ததே. இது சொகுசு வீடுகள், சொகுசு சற்று குறைவான வீடுகள் மற்றும் தற்போது பட்ஜெட் வீடுகளிலும் கூட அதிகரித்துள்ளது. கட்டுமான நிறுவனங்கள் தற்போது இந்த எளிய வீடுகளை அவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் என்ஆர்ஐ-களிடம் அதிகம் சந்தைப் படுத்தத் துவங்கியுள்ளனர்.

பொதுவாகவே இந்த பட்ஜெட் வீடுகள் 50 லட்சம் ரூபாய்க்கும் கீழே தான் விற்கப்படுகின்றன. இந்த வீடுகளின் கட்டுமானமும் இருப்பும் அதிகரித்துள்ளதால், வெளி நாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அரையாண்டு ப்ராப்டைகர்.காம் இணையதளத்தின் ஆய்வறிக்கை நிலவரப்படி மொத்த வீடுகளில் 50 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும் வீடுகள் 57 சதவிகிதமாக இருப்பதாகவும், 16 சதவிகித வீடுகள் 25 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

இந்த பட்ஜெட் வீடுகள் விற்பனையில் என்ஆர்ஐ முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் சில நகரங்களைக் காணலாம்.

மும்பை

மும்பை

ஆசியாவிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க கட்டுமானச் சந்தை இது என்றாலும், இங்கும் பல பட்ஜெட் வீட்டுத் திட்டங்களுக்கான தேர்வுகள் புறநகர் பகுதிகளில் கிடைப்பது ஆச்சரியம்தான். என்ஆர்ஐ-க்கள் கல்யான் பகுதியில் ஒரு படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்போ, பன்வேலில் உள்ள ஒரு ஸ்டூடியோ குடியிருப்பையொ அல்லது பெரிய வீடுகளை அசன்காவ்ன் அல்லது கோபோலி பகுதியிலோ தேர்வு செய்துகொள்ளலாம்.

விலை

விலை

இந்தப் பகுதிகளில் 17 முதல் 22 லட்சம் வரையிலான விலைகளில் வீட்டை வாங்கமுடியும். நகர மத்தியிலோ, நவி மும்பை அல்லது தானேவில் விலை மதிப்பு உயரும் அளவிற்கு இங்கு எதிர்பார்க்க இயலாது. எனவே இங்கே வாங்குவதென்றால் வசிப்பதற்காக மட்டும் வீடு வாங்கலாம். உதாரணமாக ஒரு என்ஆர் ஐ தங்கள் வயதான பெற்றோருக்காக ஒரு வீட்டை வாங்க விரும்பினால் இந்த புறநகர்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

பிவாடி

பிவாடி

என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகரப் பகுதியில் வளர்ந்து வரும் பிவாடி என்ஆர்ஐ-கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. நிபுனர்கள் இந்தப் பகுதியில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ-கள் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

விலை

விலை

இங்கு ஒரு படுக்கையறை கொண்ட வீடு 16 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கிறது.

இது அரியானா நகர்புற வளர்ச்சிக் கழகத்தின் எளிய குடியிருப்புகள் திட்டத்தைத் தவிர்த்து கூடுதலான ஒரு வளர்ச்சியாகும். இந்தப் பகுதி 2 படுக்கை அல்லது 3 படுக்கையறை வீடுகளைக் கொண்ட நொய்டா அல்லது குர்கானைப் போலன்றி பல புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறிய வீடுகளை கொண்டுள்ளது. இது என்ஆர்ஐ முதலீட்டாளர்களுக்கு ஒரு சொர்க்கம் என்றால் மிகையல்ல.

 

யமுனா வே

யமுனா வே

யமுனா வே என்பது என்சிஆர் பகுதியை ஒட்டியுள்ள ஒரு இடம். இங்கு குடியிருப்பு வர்த்தகம் நாட்டின் மிகப்பெரும் சாலைத் திட்டங்களால் உந்தப்பட்டுள்ளது. யமுனா வே ஆணையம் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு பெரும்திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது குடியிருப்பு அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறு வீடுகளை உள்ளடக்கியது. இது ஒரு கல்வி மையமாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

விலை

விலை

டெல்லி என்சிஆர் பகுதியின் ஒரு விரிவாக்கமாகவும் இது தரகு செய்யப்பட்டும் வருகிறது. பிவாடியைப் போலவே இங்கும் வீட்டு விலைகள் கையடக்கமாகவே உள்ளன. இங்கு ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை 17 முதல் 34 லட்சம் வரை உள்ளது.

புனே

புனே

புனே சொகுசு வீட்டுத் திட்டங்களுக்குப் பெயர் பெற்றிருந்தாலும், எளிய வீடுகளை வாங்கும் மக்களுக்கும் நிறைய தேர்வுகளை வைத்துள்ளது. வாகன உற்பத்தி மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழும் பணியாளர்களை அதிகம் கொண்ட இந்த நகரம் பல எளிய குடியிருப்பு வளாகங்களையும் திட்டங்களையும் கொண்டுள்ளது.

விலை

விலை

சிகாலி, பிசோலி, கசார், அம்போலி மற்றும் எவாலிவாடி ஆகிய பகுதிகள் 25 முதல் 34 லட்சம் வரையுள்ள விலையில் வீடுகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த நகரம் கட்டுமானம் நடந்துவரும் மற்றும் உடனடியாகக் குடியேறக்கூடிய வீடுகள் குறைந்த விலையில் நிறையக் கொண்டுள்ளது.

பெங்களூரு

பெங்களூரு

ஐடி மையமான பெங்களூரு பல்வேறு வகைப்பட்ட மலிவு விலை வீடுகளையும் சொகுசு வீடுகளையும் கொண்டுள்ளது. பெருமளவிலான புதிய பகுதிகள் வளர்ந்து வரும் நிலையில், அது தேவனஹள்ளியிலுள்ள விமான நிலையப் பகுதியாகட்டும், எலெக்ட்ரானிக் சிட்டியின் விரிவாக்கமாகட்டும், முதலீடு செய்ய இங்கு நிறைய வாய்ப்பு வசதிகள் உள்ளன.

விலை

விலை

நகரத்தின் தெற்குப் பகுதியில், ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பு அத்திபள்ளி பகுதியில் 16 லட்சம் ரூபாயும் இன்னும் பல வீடுகள் 10 லட்சம் ரூபாய்க்கும் கூட கிடைக்கிறது. அதேபோல், ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்புகள் ஜாலாஹல்லியில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. கெங்கேரி, அனெகார் மற்றும் ஹோசுர் ரோடு பகுதிகளில் கூட நல்ல மலிவான வீடுகள் கிடைக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+