மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஆபத்தா? பணத்தை இழக்க நேரிடுமா?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போன்றதான், இதில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் முதலீடு செய்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

எனவே, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஆபத்தா? பணத்தை இழக்க நேரிடுமா? என்ற சந்தேகங்கள் வரக்கூடும். இதைப்பற்றி விரிவாக நாம் இங்கு பார்க்கலாம்.

பணத்தை இழக்க நேரிடுமா?

பணத்தை இழக்க நேரிடுமா?

ஆம், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன திட்டங்கள் தினசரி சந்தை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் மாறுபடும். இதனால் பணத்தை இழக்க நேரிடும்.

ஏனென்றால் வைப்பு நிதித் திட்டம், அரசாங்க அனுமதித்த பத்திரங்கள் போன்று நிலையான வருமானத்தை இதில் பெற இயலாது.

 

ஏதேனும் ரிஸ்க் உள்ளனவா?

ஏதேனும் ரிஸ்க் உள்ளனவா?

ஆம் ரிஸ்க் உள்ளன. அதற்காகப் பயப்பட வேண்டாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பற்றிய விளம்பரங்களில் "மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சந்தை ரிஸ்க்கைப் பொருத்தத்து" (Mutual fund investments are subject to market risks ...) என்ற வாசகத்தை பார்க்கவோ, கேட்டிருக்கவோ கூடும். இந்த வாசகத்திற்கு ஏற்றார் போல ரிஸ்க் உள்ளது.

 

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

எந்த முதலீட்டில் தான் ரிஸ்க் இல்லை. எல்லா முதலீடுகளிலும் ரிஸ்க் இருக்கின்றன. இப்படி எச்சரிக்கை செய்வதை விட இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும்.

தற்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், செபி போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்யும் முன் முழுமையான அதனை பற்றித்தெரிந்துக் கொண்டு முதலீடு செய்யுங்கள்.

 

விலை ரிஸ்க்

விலை ரிஸ்க்

பங்குகள்/பத்திரங்கள் விலை குறையும் போது அதன் நிகர சொத்து மதிப்பு (NAV), அதாவது மொத்த விலை மதிப்பு குறையும். இதுவே நம்முடை முதலீட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது.

லிக்விடிட்டி ரிஸ்க்

லிக்விடிட்டி ரிஸ்க்

லிக்விடிட்டி ரிஸ்க் என்பது பங்குச் சந்தையில் எவ்வளவு வேகமாக வர்த்தகமாகிறது என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு. இப்போது நிறுவனங்களின் பங்குகள் லாட்டாக, அதிக வால்யுமாக வர்த்தகம் செய்யும்போது லிக்விடிட்டி ரிஸ்க் குறைவு.

அதுவே குறைந்த அளவு பங்குகள் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ரிஸ்க் அதிகம்.

 

கிரெடிட் ரிஸ்க்

கிரெடிட் ரிஸ்க்

ஒரு நிறுவனம் தான் வாங்கி இருக்கும் கடன்களை குறிப்பிட்ட நேரத்தில் வட்டியுடன் திருப்ப செலுத்த முடியாமல் போனால் அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை பாதிக்கும். மேலும் அது நிறுவத்தின் நிகர சொத்து மதிப்பை (NAV) பாதிக்கும்.

டிஃபால்ட் ரிஸ்க்

டிஃபால்ட் ரிஸ்க்

ஒரு நிறுவனத்தின் பத்திரங்களை நீங்கள் விற்கும் போது உங்கள் முதலீட்டைத் திருப்பி தர தாமதிப்பது, வாடிக்கையாளர் முதலீட்டின் வருமானம் / கடன் / கலப்பு ஃபண்டுகள் என எல்லாவற்றையும் பாதிக்கும்.

இது போன்ற ரிஸ்க்குகள் வங்களில் டெப்பாசிட் செய்யும் போதும் உள்ளது. ஆனால் நாம் அதைக் கண்டுகொள்வதில்லை.

 

ரிஸ்க்கைத் தாண்டிய வருமானம்

ரிஸ்க்கைத் தாண்டிய வருமானம்

இத்தகைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பல ரிஸ்க்குகள் புதைந்து இருந்தாலும், கடந்த 20 வருடங்களில் பல மியூச்சுவல் ஃபண்டுகள் 15 முதல் 20 சதவீதம் வரை வருமானத்தைக் கொடுத்துள்ளன.
நம்முடை வருமான சரியான முதலீட்டு நிறுவனத்தையும் திட்டத்தையும் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+