குழந்தைகள் கல்விக்காக சேமித்து வருகிறீர்களா..? அதைச் சரியான முறையில் செய்வதற்கான சில வழிகள்..!

குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை அளிக்க விரும்புவது எல்லா பெற்றோருடைய கனவாகும். அதைச் சரியான முறையில் செய்கிறீர்களா, அந்த இலக்கை அடையச் சரியான முதலீடு எது? என்பது பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

பெண் குழந்தைகளுக்கு உள்ள சுகன்யா சம்ரித்தி திட்டம் போல நிறையத் திட்டங்களை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகிறன. அதில் உங்கள் இலக்கை அடையக் கூடிய முதலீடு திட்டங்கள் என்ன?

இலக்கை முடிவு செய்யுங்கள்

இலக்கை முடிவு செய்யுங்கள்

பொறியியல் அல்லது எம்பிஏ படிக்க வைக்க இப்போது 10 லட்சம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொகை உங்களுக்கு 10-15 வருடத்திற்குப் பிறகு தேவை என்றால் பணவீக்கத்தைப் பொருத்து இந்த அத்தொகை மாறும்.

எடுத்துக்காட்டுக்கு தற்போது ரூ.10 லட்சம் என்றால் 15 வருடத்திற்குப் பிறகு 8 சதவீத பணவீக்கம் என்று வைத்துக் கொண்டால் ரூ. 41 லட்சம் தேவைப்படும். எனவே முதலில் இலக்கை முடிவு செய்யுங்கள்.

 

ஆபத்து நிலை மற்றும் கால எல்லை

ஆபத்து நிலை மற்றும் கால எல்லை

முதலீடு செய்வதற்கு முன்பு ஆபத்து நிலை மற்றும் கால எல்லை இரண்டும் மிக முக்கியம்.

உங்கள் குழந்தைகளின் படிப்புக்கு இன்னும் 4 முதல் 5 வருடங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிக ஆபத்து உள்ள ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

 

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிக ஆபத்தை உடையது. ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு குறைந்தது 11 சதவீத லாபத்தைப் பார்க்கலாம்.

நிரந்தர வைப்பு நிதியில் 7 முதல் 7.5 சதவீத வட்டி போன்றவற்றில் முதலீடு செய்வதை விட இதில் அதிக லாபம் பெற இயலும்.

 

பேலன்ஸ்ட் ஃபண்டுகள்

பேலன்ஸ்ட் ஃபண்டுகள்

பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 65% ஈக்விட்டியிலும் 35% கடன் பத்திரங்களாகவும் முதலீடு செய்வதாகும். இது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் போல இருந்தாலும் லாபத்தை மட்டும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான திட்டம் ஆகும்

சுகன்யா சம்ரித்தி திட்டம்

சுகன்யா சம்ரித்தி திட்டம்

இதுவும் லாபத்தை மட்டும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான திட்டம் ஆகும். ஆனால் இது 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே முதலீட்டைத் தொடங்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை 80சி கீழ் வரி விலக்கு பெறலாம்.

வருடத்திற்கு 1.50 லட்சம் என 18 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால் முதிர்வு காலம் முடிவடையும் போது ரூ.57 லட்சம் வரை நீங்கள் பெறலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

யாருக்கெல்லாம் பெண் குழந்தைகள் இல்லையோ அவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் உள்ள எல்லா பயன்களையும் பெறலாம்.

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளை கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றும் கூறலாம். இதுவும் நிரந்தர வைப்பு நிதித் திட்டத்திற்கு பதிலாக நீங்கள் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டமாகும். இதின் வழியாக வரும் ஆதாயங்களுக்கு மூன்று வருடத்திற்குப் பிறகு 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி வரலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+