வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்தில் (Fixed deposit) முதலீடுகள் செய்வதைவிட அரசு வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்வது கடந்த ஒரு மாதத்தில் சராசரியாக 40 சதவீதம் வரை லாபத்தை அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியன் வங்கி 60 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் உங்களுக்காக 40 சதவீதத்திற்கு மேல் லாபம் அளிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை பற்றிய விவரங்களை உங்களுக்கு அளிக்கிறோம். படித்து பயன் பெறுக.
அலஹாபாத் வங்கி
அலஹாபாத் வங்கியில் பங்குகள் ஒரே மாதத்தில் 51 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் வங்கியின் வைப்பு நிதி திட்டம் மூலம் லாபம் 7.5 சதவீதம் மட்டுமே.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்குகள் ஒரு மாதத்தில் 53 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வசூலாகாத கடன், பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் போன்ற நம்பிக்கையில் வங்கியின் பங்கு விலை ஏற்றம் கொண்டுள்ளது.
ஓரியண்டல் வங்கி
கடந்த ஒரு மாதத்தில் 47 சதவீதம் வரை இந்தப் பங்குகள் லாபத்தை அளித்துள்ளது. வசூலாகாத கடன், பொருளாதார மீட்சி போன்றவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளதால் மேலும் உயர வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கியின் பங்குகள் 60 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. ஆனால் வங்கியின் வைப்பு நிதி திட்ட கணக்கில் முதலீடு செய்தால் இந்த அளவிற்கு லாபம் பெற 8 ஆண்டுகள் வரை ஆகும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியின் பங்குகள் எஸ்பிஐ வங்கியுடனான இணைப்பிற்கான அறிவிப்பை அடுத்து 47 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. மேலும் எஸ்பிஐ-யின் பிற துணை வங்கிகளின் பங்குகளும் இதே போல உயர்ந்து குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications