உங்கள் சம்பள கணக்கு எந்த வங்கியில் உள்ளது..? இந்தியாவில் சிறந்த 6 சம்பள கணக்குகள்..!

அரசு மற்றும் தனியார் என அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் தற்போது வங்கி கணக்குகள் வாயிலாகவே வழங்கப்படுகிறது.

நீங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வெவ்வேறு வங்கிகளுடன் தொடர்பு கொண்டு உங்களுக்குச் சம்பள கணக்குகளை அளிக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணக்கு மற்றும் வங்கிகளிலும் நீங்கள் பெரும் சம்பளத்தைப் பொருத்து கணக்கின் அம்சங்கள் மற்றும் பிற முறைகள் மாறும்.

பல தனியார் வங்கிகளில் சம்பள கணக்குகள் அளிக்கின்றன, ஆனால் அதில் நீங்கள் பேரும் சம்பளத்தைப் பொருத்து சலுகைகள் மற்றும் நன்மைகள் மாறலாம். இது உங்களுக்கு அளிக்கப்படும் டெபிட், கிரெடிட் கார்டு என அனைத்திற்கும் பொருந்தும்.

எனவே நாங்கள் உங்களுக்கு சில சிறந்த சம்பள வங்கி கணக்கு திட்டங்களைப் பற்றி வழங்குகிறோம்.

ஐசிஐசிஐ சம்பளம் கணக்கு

ஐசிஐசிஐ சம்பளம் கணக்கு

ஐசிஐசிஐ சம்பளம் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக எந்தக் கட்டணமும் இல்லாமல் டிடி, செக் போன்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

ஐசிஐசிஐ வங்கி ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவுசெய்துள்ளதுடன் நேஷன்ல் பென்சன் திட்டம் போன்ற சேவைகளைப் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. உங்கள் டெபிட் கார்டு போன்றவற்றை இழந்துவிட்டால் எந்தவொரு நிர்பந்தமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை பாதுகாப்பு அளிக்கும் வசதி உள்ளது.

 

எச்டிஎஃப்சி சம்பளம் கணக்கு

எச்டிஎஃப்சி சம்பளம் கணக்கு

எச்டிஎஃப்சி சம்பளம் கணக்கில் ரூ .1 லட்சம் இலவச தனிப்பட்ட விபத்து மரணம் காப்பீடு உள்ளது. பீரிமியம் சம்பள கணக்குகளில் இலவச போஜ்ஜியம் இருப்பு நிலையில் கணக்கை பராமரிக்க இயலும். அதுமட்டும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப சம்பள கணக்கு வசதியும் உள்ளது.

சிடி பேங்க்

சிடி பேங்க்

தனிநபர்கள் சிடி பேங்க் சம்பள கணக்கில் எடுக்கக் கூடிய தொகை ஏதும் இல்லை என்றாலும் 5 மடங்குகள் கடனாக பெறலாம்.

தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றில் உங்களுக்குத் தகுதி இருந்தால் வெகுமதி புள்ளிகள் போன்றவற்றைப் பெறலாம்.

 

எஸ்பிஐ சம்பளம் கணக்கு

எஸ்பிஐ சம்பளம் கணக்கு

பெருநிறுவன அல்லது நிறுவனங்கள் தங்கள் வங்கிகளில் வைத்துள்ள வணிக உறவைப் பொருத்து எஸ்பிஐ சம்பள கணக்குகளுக்குச் சிறப்பு சலுகையாக திருத்தியமைக்கக் கூடிய சலுகைகளை வழங்குகிறது.

ஆக்ஸிஸ் பேங்க்

ஆக்ஸிஸ் பேங்க்

எச்டிஎஃப்சி வங்கியைப் போல ஆக்ஸிஸ் வங்கியிலும் மாத சம்பளத்தைப் பொருத்து வெவ்வேறு கணக்கை அளிக்கிறது.

எளிதாக அணுகல் சம்பளம் கணக்கு, டிஃபன்ஸ் சம்பளம் கணக்கு, ப்ரைம் சம்பள கணக்கு எனப் பல சம்பள கணக்கு வசதிகளை ஆக்ஸிஸ் வங்கி அளிக்கிறது.

 

கோட்டாக் மகேந்திரா பேங்க்

கோட்டாக் மகேந்திரா பேங்க்

ஐஎன்ஜி வைசியா வங்கியுடன் இணைந்த பிறகு நாடு முழுவதும் பல கிளைகளைப் போற்றுள்ளது. கணக்கில் நிறைய நாட்கள் பயன்படுத்தாமலேயே விடப்படும் தொகைக்கு அதிக வட்டி அளிக்கும்.

உங்கள் டெபிட் கார்டு போன்றவற்றை இழந்துவிட்டால் எந்தவொரு நிர்பந்தமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை பாதுகாப்பு அளிக்கும் வசதி கோட்டாக் மகேந்திரா வங்கியிலும் உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+