7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

மும்பை: 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.

இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.

கிராஜுவிட்டி என்றால் என்ன?

கிராஜுவிட்டி என்றால் என்ன?

கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.

 

அரசுத் துறையில் கிராஜுவிட்டி

அரசுத் துறையில் கிராஜுவிட்டி

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாக ஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.

கிராஜுவிட்டி கணக்கிடுதல்

கிராஜுவிட்டி கணக்கிடுதல்

இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.

இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

பணியின் போது காலமானால்

பணியின் போது காலமானால்

பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.

கிராஜுவிட்டி முதலீடு

கிராஜுவிட்டி முதலீடு

இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்.

ஈக்விடி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விடி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விடி மியூச்சுவல் ஃபண்டுகள் ரிஸ்க் என்றாலும் நீங்கள் மொத்த தொகையும் இதில் முதலீடு செய்யாமல் குறிப்பிட்ட தொகையாய் இதற்கு ஒதுக்கீடு செய்து முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் ஹை ரிஸ்க் மற்றும் லோவ் ரிஸ்க் என்று இருவிதமான முதலீடுகள் உள்ளன. ஹை ரிஸ்க்கில் அதிக லாபம் இருந்தாலும் இதில் பெயருக்கேற்றார் போல ரிஸ்க் அதிகம்.

ஆனால் லோவ் ரிஸ்க்கில் முதலீடு செய்வதால் குறைந்த அளவு லாபம் அதே சமயம் குறைந்த ரிஸ்க்கும் கூட.

 

வருடாந்தர திட்டங்கள்

வருடாந்தர திட்டங்கள்

வருடாந்திர திட்டங்கள் பெரும்பாலானவை காப்பீடு நிறுவனங்கள் வழங்குபவை. இதில் பெரும் தொகை முதலீடு செய்பவர்கள் தொடர் வருமானமாகப் பெறலாம்.

இத்திட்டங்களில் வருடத்திற்கு 7 முதல் 7.5 சதவீதம் வரை லாபம் கண்டிப்பாக பெறலாம். ஆனால் இதில் இருந்து நீங்கள் பெறும் லாபம் முழுவதற்க்கும் லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

 

வங்கி நிரந்தர வைப்புத் தொகை திட்டம்

வங்கி நிரந்தர வைப்புத் தொகை திட்டம்

வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் திரும்பப்பெற உத்தரவாதம், எளிதில் முதலீட்டை இடையில் பெறுதல் மற்றும் பாதுகாப்பானது.

மாதாந்திர வருமான திட்டங்கள்

மாதாந்திர வருமான திட்டங்கள்

இதுவும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றுதான் ஆனால் 15 முதல் 20 சதவீதம் ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு மூன்று வருடத்திற்குட்ப்பட்டு முதலீடு செய்யும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். மூன்று வருடத்திற்குப் பிறகு லாபத்தில் 20 சதவீதத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

இதில் முதலீடு செய்வது குறைவான ரிஸ்க் ஆனால் வரி செலுத்த வேண்டியது இல்லை என்றால் இது ஒரு சிறந்த முதலீடு ஆகும்.

 

கார்ப்ரேட் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள்

கார்ப்ரேட் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள்

நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது குறைந்த லாபமே என்றாலும் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாகக் கருதப்படுகிறது. எனவே நாம் வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

எச்டிஎஃப்சி நிரந்தர வைப்புத் தொகை திட்டம் போன்ற திட்டங்களில் வங்கிகளைவிடக் கூடுதலாக ஒரு சதவீதம் வட்டியை நீங்கள் பெறலாம்.

 

கூட்டுறவு வங்கிகள் வைப்பு தொகைகள்

கூட்டுறவு வங்கிகள் வைப்பு தொகைகள்

கூட்டுறவு வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்வதினால் 9 சதவீதம் வரை லாபம் பெறலாம், ஆனால் இதுவும் ஒரு ரிஸ்க்கான முதலீடே ஆகும்.

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+