இந்தியாவில் வீடு, நிலம் வாங்க இதுதான் சரியான நேரம்..!

சென்னை: இந்தியாவில் நடைபெறும் சொத்து விற்பனையில் என்.ஆர்.ஐ.-களின் பங்களிப்பு 18%. கடந்த சில வருடங்களாக, ரியல் எஸ்டேட் சந்தையில் என்.ஆர்.ஐ. முதலீடு அதிகரித்து வருகிறது, குறிப்பாக யு.ஏ.ஈ., சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, யு.கே. மற்றும் தென் ஆப்ரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள்.

இதன் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு தோழமையான அரசாங்கம் அமைந்த பின், இத்தகைய முதலீடு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது

இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் மொத்த வீட்டுமனை விற்பனையில் என்.ஆர்.ஐ. முதலீடு 30-35 சதவீதம் அதிகரிக்கலாம் என அறிக்கை கூறுகிறது.

இது தான் என்.ஆர்.ஐ.-கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் என போற்றப்படுவதற்கு என்ன காரணம்.

அதிகரிக்கும் மதிப்பு

அதிகரிக்கும் மதிப்பு

இந்தியாவில் சொத்து முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 20-25 சதவீதம் அதிகரிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். நல்ல முதலீடு என்றால் நீண்ட கால பயனாக 30-40 சதவீதம் வருவாய் கிடைக்கலாம்.

 வெளிநாடுகளில் குறைந்த லாபம்

வெளிநாடுகளில் குறைந்த லாபம்

இந்தியாவில் இருப்பதை போல் சொத்தின் மீதான வருவாய் அதிகமாக இல்லாத யு.எஸ்., யு.கே. மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ.-களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.

சர்க்கிள் வீதம் குறைந்தது 10-15 சதவீதமும் அதற்கு மேலாகவும் அதிகரிக்கலாம். சர்க்கிள் வீதம் என்பது அரசாங்க அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் குறைந்த பட்ச விற்பனை மதிப்பாகும்.

 

சாதகமான கட்டுப்பாடுகள்

சாதகமான கட்டுப்பாடுகள்

சொத்து வாங்க சிறந்த இடமாக இந்தியாவை என்.ஆர்.ஐ.-கள் கருதுவதற்கு இன்னொரு காரணமாக இருப்பது சுலபமான கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான காகித வேலைப்பாடு.

ஜாக்பாட்

ஜாக்பாட்

இந்திய பாஸ்போர்ட்டை கொண்டுள்ள ஒவ்வொரு என்.ஆர்.ஐ.-யும் இனி விவசாய நிலம் அல்லது வயல்வெளி தவிர பிற அசையா சொத்துக்களை வாங்கலாம். பணத்தை இந்தியாவிற்கு நான்-ரெசிடெண்ட் எக்ஸ்டெர்னல் / நான்-ரெசிடெண்ட் ஆர்டினரி (என்.ஆர்.ஈ/என்.ஆர்.ஓ) கணக்கு மூலமாக கொண்டு வரலாம்.

இந்த ஒப்பந்தத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அனுமதி எதுவும் தேவையில்லை.

 

1 மில்லியன் டாலர்

1 மில்லியன் டாலர்

நீங்கள் பரமாற்றம் செய்யப்படும் தொகை $1 மில்லியனை தாண்டவில்லை என்றால் அரசின் அனுமதியின்றி அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனைத் தொகையை தாய்நாட்டிற்கு கொண்டு வரலாம்.

80% வரை கடன்

80% வரை கடன்

மற்றொரு சொத்தின் மீது மீண்டும் முதலீடு செய்தால், சொத்தின் மீதான விற்பனைத் தொகைக்கான மூலதன ஆதாயத்தை அரசாங்கம் தள்ளுபடி செய்யும். மேலும் பணத்தை ரூபாயில் செலுத்த, சொத்தின் மதிப்பின் மீது என்.ஆர்.ஐ.-கள் 80% வரை கடன் வாங்கிக்கொள்ள இந்தியா அனுமதிக்கிறது.

சரியும் ரூபாய் மதிப்பு

சரியும் ரூபாய் மதிப்பு

சீன நாணயமான யுவானின் மதிப்பு குறைந்ததால், சமீபத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு யு.எஸ். டாலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சரிந்தது.

பிற நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால், மிக குறைந்த செலவில் என்.ஆர்.ஐ.-கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கலாம்.

 

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

நாணய சந்தை ஒரு எளிதில் மாறக்கூடிய நிகழ்வாகும். அதனால் வருங்காலத்தில் ரூபாயின் மதிப்பு வலுவடையலாம். அப்படியானால் இங்கே முதலீடு செய்வது விலையுயர்ந்ததாக இருக்கும். அதனால் சரிந்த மதிப்பு மீண்டும் எழுந்திருப்பதற்குள் என்.ஆர்.ஐ.-கள் இங்கே முதலீடு செய்தால் லாபமடையலாம்.

திட்டங்களும் சலுகைகளும்

திட்டங்களும் சலுகைகளும்

சந்தை நிலைகளை நன்றாக அறிந்துள்ளதால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பிரத்யேக சலுகைகள் மூலமாக என்.ஆர்.ஐ.-களை ஈர்க்கின்றனர். இந்தியாவில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகளை வெளிநாட்டில் எக்சிபிஷன் மூலமாக மார்க்கெட் செய்து, விற்பனை செய்வதன் மூலம், உயர் நிகர-மதிப்புள்ள இந்தியர்கள் மற்றும் பணக்கார என்.ஆர்.ஐ.-களை குறி வைக்கின்றனர்.

சொத்து பதிவு

சொத்து பதிவு

இந்த சலுகைகளை இன்னும் ஈர்ப்புடையதாக ஆக்க, காகித வேலைப்பாடுகளையும் (சொத்து பதிவு போன்றவை) பில்டர்களே ஏற்றுக்கொள்கின்றனர். செயல்முறைகளை சுலபமாக்குவதன் மூலம் நம் நாட்டில் என்.ஆர்.ஐ. முதலீட்டை அதிகரிப்பதை உறுதி செய்ய, ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோஸியேஷன் ஆப் இந்தியா (சி.ஆர்.ஈ.டி.ஏ.ஐ) டெவலப்பர்ஸ் பாடி கான்பெடரேஷன். இது போக, ஸ்மார்ட் சிட்டி மிஷன் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களும் என்.ஆர்..ஐ.-களுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+