ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கான எல்ஐசி மொபைல் செயலியினை அறிமுகப்படுத்தி உள்ளது உங்களுக்கு தெரியுமா?
ஏற்கனவே எல்ஐசியில் பாலிசி வைத்துள்ளவர்கள், மற்றும் இப்போது புதியதாக பாலிசி துவங்க உள்ளவர்கள் என அனைவரும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆப்பை பதிவிறக்க இங்கு கிளிக் செய்க.
திட்டங்கள்
தனிநபர்கள் எல்ஐசியில் உள்ள எல்லாத் திட்டங்கள் பற்றியும் இங்குப் பார்க்கலாம். எண்டோவ்மெண்ட் திட்டம், மணி பாங்க் திட்டம், பென்ஷன் திட்டங்கள், டர்ம் அஷ்சூரன்ஸ் திட்டம் என நான்கு வகையான திட்டங்களையும் இங்குப் பார்த்து பயன்பெறலாம்.
மேலே கூறியுள்ள ஏதேனும் ஒரு வகையான திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும்போது அதன் வகையின் கீழே உள்ள பிற திட்டங்கள் மற்றும் நன்மைகளைப் பார்க்க இயலும்.
ப்ரீமியம் செலுத்துதல்
எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களது ப்ரீமியம் சந்தாவை கவுண்டர்கள் சென்று வரிசையில் காத்திருந்து கட்டாமல் எளிதாக மொபைலில் இருந்த படியே செலுத்திவிடலாம்.
பாலிசி எண், ப்ரீமியம் செலுத்த வேண்டிய பணம், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை இருந்தால் எளிதாக இந்தச் செயலியை பயன்படுத்தி ப்ரீமியம் சந்தாவை செலுத்திவிடலாம்.
முந்தைய பரிவர்த்தனையைச் சரிபார்த்தல்
பாலிசிதாரர்கள் பாலிசி எண் மற்றும் பரிவர்த்தனையை உள்ளீட்டுத் தங்களது முந்தைய பரிவர்த்தனை விவரங்களை எளிதாகப் பார்க்க இயலும்.
ப்ரீமியம் கால்குலேட்டர்
ப்ரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி எளிதாக ப்ரீமியம் கட்டணத்தை சரிபார்க்கலாம். இதற்கு உங்கள் திட்டத்தைத் தேர்வு செய்து, வயது மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை குறிப்பிட வேண்டும்.
மேலும் இரண்டு திட்டங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளையும் சரிபார்க்கலாம்.
பாலிசி வாங்குதல்
தங்களது அடிப்படை தொடர்பு தகவல்களை உள்ளிடுவதன் மூலமாக எல்ஐசி பிரதிநிதிகள் உங்களைத் தொடர்பு கொண்டு பாலிசி துவங்குவதற்கான பணிகளைச் செய்வர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications