கடந்த காலங்களில் இந்தியாவில் பல வங்கிகள் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளன அல்லது திவாலாகியுள்ளன, ஆனால், அவற்றில் பல கூட்டுறவு வங்கிகளாகும். இதுவே தனியார் வங்கிகள் சரியாக செயல்படாத நிலையில் அதை பொதுவாக பெரிய வங்கிகள் எடுத்துக்கொள்ளும்.
கடந்த 2013 ஆண்டு பல வங்கிகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் பல கூட்டுறவு வங்கிகளாகும். துல்லியமாக 16 வங்கிகள் என்றும் அவற்றில் செலுத்தப்பட்ட தொகை ரூ. 160 கோடிகள் ஆகும்.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்த வங்கிகளில் பணம் சேமித்தவர்களுக்கு யார் திருப்பி அளிப்பார்கள் என்பதைப் பார்ப்போம்...
யார் பொறுப்பு?
வங்கியால் செலுத்த முடியாமல் போனாலோ, திவாலானாலோ, ஆர்பிஐ-ன் கீழ் இயங்கும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கழகம் (DICGC)நிரந்தர வைப்புத் தொகையை சேமிப்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்தும்.
ஒரு பிரச்சனை
எனினும், இங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கழகமானது மொத்த தொகையையும் திருப்பிச் செலுத்தாது. வட்டி மற்றும் அசல் தொகையிடம் ரூ. 1 லட்சம் மட்டுமே திருப்பி அளிக்கும்.
எடுத்துக்காட்டு
எனவே, உதாரணத்திற்கு A வங்கியில் நீங்கள் ரூ. 80,000 ரொக்கம் நீங்கள் வைத்துள்ளீர்கள், அதற்கான வட்டி ரூ. 9,000 என்று வைத்துக்கொள்ளுங்கள்.
A என்ற வங்கியால் செலுத்த முடியாமலோ திவாலானாலோ உங்களுக்கு ரூ. 89,000 கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் 2 லட்சம் சேமிப்பு வைத்து இருந்தாலும் கூட வட்டியுடன் ரூ.1 லட்சம் மட்டுமே திருப்பி அளிக்கும்.
இப்போது ஒரு கேள்வி எழலாம்
எனது வங்கி DICGC-இல் காப்பீடு செய்துள்ளதா அல்லது இல்லையா என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது? எல்லாத் தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகளும் DICGC-இல் காப்பீடு செய்து இருக்கும். ஆனால், சிறிய உள்ளூர் கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தால் அது கடினம் தான்.
காப்பீடு சான்றிதழ்
இப்படிப் பட்ட சூழ்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து குறிப்பிட்ட வங்கி காப்பீடு சான்றிதழைப் பெற்றுள்ளதா என்பதை வங்கி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளவும். இது வங்கிகளில் பார்வைக்காக வைத்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
ஒரே வங்கியில் இரண்டு கிழை
இப்போது நீங்கள் ஒரே வங்கியில் இரண்டு வெவ்வேறு கிளைகளில் சேமித்து வைத்திருந்தால் என்ன ஆகும் என்று கேட்கலாம். இந்தச் சூழ்நிலையில் எந்தக் காரணத்திற்காக நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஆகும்.
அதாவது நீங்கள் இரண்டு கணக்குகளையும் சேர்த்து ரூ. 1.5 லட்சம் வெவ்வேறு கிளைகளில் வைத்திருந்தாலும் கடைசியாக ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இது போன்ற கோரிக்கைகளின் போது காப்பீடு மற்றும் அசல் தொகை ஒன்றாகவே கணக்கிடப்படும்.
வெவ்வேறு வங்கி என்றால்?
சரி, வெவ்வேறு வங்கியில் பணத்தை நீங்கள் வைத்திருந்தால் என்ன ஆகும்?
ஒருவேளை இரண்டு வங்கிகளும் திவாலானால், இரண்டு வங்கி கணக்கையும் சேர்த்து நீங்கள் ரூ. 1 லட்சம் வைத்திருந்தாலும் காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் வரை கணக்கிடப்படும்.
மிக அரிதான வாய்ப்பு?
ஒரே சமயத்தில் இரண்டு வங்கிகள் செயல்பட முடியாமல் போகுவது மிக அரிது. இந்த கொடுக்கப்பட்ட காப்பீடானது ஒவ்வொரு தனிநபருக்கானது அல்ல, ஒரு வங்கிக்கானது என்பதை நினைவில் கொள்க.
வாசகர் கேள்விக்கு பதில்..
வங்கி திவால் ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லையா? என்று கேட்டு இருந்தார்.
வங்கி திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணமே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது தானே.. வங்கிகளில் கடன் வாங்கிய நிறுவனங்கள், தனிநபர்கள் அனைவரும் முறையாக கடன் திருப்பி செலுத்திருந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications