அக்டோபர் 1-க்கு பிறகு புதிதாக இன்சூரன்ஸ் பாலிஸி வாங்க விரும்புகிறீர்களா, இ-இன்சூரன்ஸ் கணக்கு இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா?
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அன்மையில் கட்டாயமாக இ-இன்சூரன்ஸ் கணக்கு வைத்து இருக்க வேண்டும் என்பதை அறிவித்துள்ளது.
எனவே நாம் இங்கு எப்படி இ-இன்சூரன்ஸ் கணக்கை திறப்பது என்பதற்கான படிகளை பார்ப்போம்.
இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி
உங்கள் இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி தேர்வு செய்யவும் அல்லது அரசு பட்டியலிட்டுள்ள இன்சூரன்ஸ் நிலையத்துடன் இணைப்பில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி தேர்வு செய்யலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
இணைதளத்தில் இருந்து இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி விண்ணப்பத்தை பதிவிறக்கவும்.
உங்கள் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றவும் அல்லது இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி கிளையில் சமர்ப்பிக்கவும்.
சரிபார்ப்பு
இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் இ-இன்சூரன்ஸ் விண்ணப்பத்தைச் சரிபார்த்து செயல்படுத்தும்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்து இருந்தாலும் அதை அவர்கள் இன்சூரன்ஸ் ரெபாசிட்டரியில் சமர்ப்பித்துவிடுவார்கள்.
ஐடி மற்றும் கடவுச்சொல்
இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி உங்களுக்கான கணக்கைத் திறந்து பின்னர் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைப்பர்.
அதைப் பயன்படுத்தி ரெபாசிட்டரி இணையதளத்தில் நுழைந்து உங்கள் பாலிஸி விவரங்களைப் பார்த்துக்கொள்ளலாம்.
எளிதாக இணைக்கலாம்
உங்களது பழைய பாலிஸிகளையும் எளிதாக இ-இன்சூரன்ஸ் கணக்கில் முறையான விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் ரெப்பசிட்டரியிடம் சமர்ப்பித்து எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications