சென்னை: இந்தியாவின் எல்ஐசி நிறுவனம் விரைவில் தனது வைர விழாவைக் கொண்டாட இருக்கும் நிலையில் தனது பீமா டைமண்ட் திட்டத்தை முடித்துக் கொண்டு புதிய மணி பேக் பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
தற்செயலாக பீமா டைமண்ட் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த திட்டம் எல்ஐசி நிறுவனத்தின் வைர ஆண்டு விழாவுடன் முடிவுக்கு வருகிறது என்றும் 2017 ஆகஸ்ட் 31 வரை இந்த பாலிசியை வாங்க இயலும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மணி பேக் பிளான் என்றால் என்ன?
மணி பேக் பிளான் ஒரு இலாபம்- வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் தொகை திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் 16, 20 அல்லது 24 வருடங்கள் வரையிலான பாலிசிகளை நீங்கள் வாங்கலாம். இதற்கு 10, 12 மற்றும் 15 ஆண்டுகள் வரை பாலிசித் தொகை செலுத்த வேண்டும்.
பயன்பாடு
எண்டோமென்ட் திட்டங்கள் போன்று இல்லாமல், மணி பேக் திட்டத்தில், பாலிசிதாரர், காலவரையின்போது "காலாந்தர கட்டணங்களைப்" பெறுவதோடு, பாலிசி நிலைத்திருக்கும் காலம் வரையில் பெருந்தொகைப் பணத்தினையும் பெறுவார்.
பாலிசி காலவரையின்போது இறப்பு நிகழ்ந்தால், பயனடைபவர், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையினையும் பெறுவார். மேலும் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
எதற்கு மணி பேக் பிளான் திட்டம்?
இந்த வகை பாலிசிகள் மிகவும் பிரபலமானவை, என்பதால் பாலிசிதாரரின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் பெருந்தொகையாகப் பெற்றுக்கொள்வதற்குரியதாக தயாரிக்கப்பட்டதே மணி பேக் பிளான் திட்டம்.
சூழ்நிலைகள்
மூன்று வருடங்கள் வரை பீரிமியம் செலுத்தி இருந்தால் மரணமோ, அல்லது ஏதேனும் விபத்தில் ஊனமுற்றாலோ பலிசிதாரகள் குறிப்பிட்ட தொகை பெற வாய்ப்புள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இடையில் கடன் பெறுவதற்கான சலுகையும் இத்திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications